top of page

Kadavul mama unai

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Kadavul mama unai panindhen

karunai seidhaay enai marandhen

udalil oadum kurudhi ellaam

un naamam solla yaan viyandhen


charanaagadhi ena padham thozhudhen - en

sanjalam theerndhidave azhudhen

karunaakaran nee arul purivaayena

kangalai moodi thavam irundhen


nillaa ulagin suzharachiyile - oru

pullaay vidhiyaal yaan pirandhen

allalgalaale avadhiyutren - oru

sollaal ennai aat kolvaay


neeye gadhiyena thedi vandhen - mana

nimmadhi perave oadi vandhen

thaaye nin manam irangaayo - un

thaalgalil amaidhi thaaraayo


venkata naadha vaikuntha

vinnavar potrum govindha

oangidum pugazhai udaiyavane - en

ulla koyilil uraibavane


saththiya saayiyin aasiyinaal

niththiyan undhanai thedi vandhen

kaththiyin mel naan nadandhuyara

kannaa nee manam poruppaayo


yezhu malai mel nee irundhaalum

en manam vandhidum unnaruge

aazhakkadalil moozhgi vitten

aiyane kai koduthetraayo




கடவுள் மாமா உனைப் பணிந்தேன்

கருணை செய்தாய் எனை மறந்தேன்

உடலில் ஓடும் குருதி எல்லாம்

உன் நாமம் சொல்ல யான் வியந்தேன்


சரணாகதி என பதம் தொழுதேன் - என்

சஞ்சலம் தீர்ந்திடவே அழுதேன்

கருணாகரன் நீ அருள் புரிவாயென

கண்களை மூடி தவம் இருந்தேன்


நில்லா உலகின் சுழற்சியிலே - ஒரு

புல்லாய் விதியால் யான் பிறந்தேன்

அல்லல்களாலே அவதியுற்றேன் - ஒரு

சொல்லால் என்னை ஆட் கொள்வாய்


நீயே கதியெனத் தேடி வந்தேன் - மன

நிம்மதி பெறவே ஓடி வந்தேன்

தாயே நின் மனம் இரங்காயோ - உன்

தாள்களில் அமைதி தாராயோ


வேங்கடநாதா வைகுந்தா

விண்ணவர் போற்றும் கோவிந்தா

ஓங்கிடும் புகழை உடையவனே - என்

உள்ளக்கோயிலில் உறைபவனே


சத்திய சாயியின் ஆசியினால்

நித்தியன் உந்தனைத் தேடி வந்தேன்

கத்தியின் மேல் நான் நடந்துயர

கண்ணா நீ மனம் பொறுப்பாயோ


ஏழுமலைமேல் நீ இருந்தாலும்

என் மனம் வந்திடும் உன்னருகே

ஆழக்கடலில் மூழ்கி விட்டேன்

ஐயனே கை கொடுத்தேற்றாயோ

 
 
 

Recent Posts

See All
Kaadhal kondenadi

Audio: https://drive.google.com/file/d/1GLPMCIy5p9rQjSWOXZGMRHecmlGjUIgY/view?usp=sharing Kaadhal kondenadi nee en kaaviyam aanaayadi -...

 
 
 
Kaadhal pirakkudhada

Audio: https://drive.google.com/file/d/1LihvqJZDVWoR0ZlFQHufflE23tiOx-BQ/view?usp=sharing Kaadhal pirakkudhada undhan kangalai...

 
 
 
Kaadhalaagi kasindhu

Audio: https://drive.google.com/file/d/129Hl8xbnl4uwNbA8X1SuszdiuQ8tcWmo/view?usp=sharing Kaadhalaagi kasindhu urugi kaaladiyai charan...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page