Kadalalai modhum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Kadalalai modhum sendhoor
madhil konda veedudaiyone
madalavizh thaamarai poovil
magavaaga malarndhu vandhone
udalthanai vidukkum maayam
ulagile yaan ariyen
kadavule muruga undhan
kamala malar paadham serppaay
yeragaththone swami
nadhane nee kann paaraay - mana
theragaththe uraiyum nal
theenthamizh suvai udaiyone
paar mugam ellaam undhan
paal mugam kandomaiya - nee
vaarmugam ovvonrum veraay
vaaraththadhevvidhamo aiya
parankunril vaazhum eesaa
paar pugazh thamizh kuralone
varam onru tharuvaay aiya
vallale valli mannala
suram onru ulle ninru
sruthiyatru thavikkudhaiya
subramanya unai paadum
sol enakkarulvaay aiya
aavinan kudi vaazh arase
annale em gathi n eeye
paavi enai kann paaraay
parvathiyaal petra bala - thinai
maavile rusiyai kanda
maalavan marumagane
thaavi nee mayil mel varuvaay
thanjame neeye muruga
sokkanin thirukumara
sundhara muruga aiya
pakka thunaiyaay iruppaay
parvadhiyaal petra bala
ikkanam vandhu neeyum
innarul tharuvaay aiya
sikkalai theerththu vaippaay
singaara vela kandha
vayalooril valarum vele vaazhvile valam tharuvaaye
kayal vizhi meenaal pudhalva
karunai thadhumbum kanna - siru
payalena auvai azhaitha
siruvane nee seyyum
seyal ellaam kurumbeyanro
selva vilaiyada vaaraay
கடலலை மோதும் செந்தூர் மதில் கொண்ட வீடுடையோனே
மடலவிழ் தாமரைப் பூவில் மகவாக வளர்ந்து வந்தோனே
உடல்தனை விடுக்கும் மாயம் உலகிலே யான் அறியேன்
கடவுளே முருகா உந்தன் கமல மலர்ப் பாதம் சேர்ப்பாய்
ஏரகத்தோனே ஸ்வாமி நாதனே நீ கண்பாராய் - மனத்
தேரகத்தே உறையும் நல் தீந்தமிழ்ச் சுவையுடையோனே
பார் முகம் எல்லாம் உந்தன் பால் முகம் கண்டோமையா - நீ
வார்முகம் ஒவ்வொன்றும் வேறாய் வார்த்ததெவ்விதமோ ஐயா
பரங்குன்றில் வாழும் ஈசா பார் புகழ் தமிழ்க் குரலோனே
வரம் ஒன்று தருவாய் ஐயா வள்ளலே வள்ளி மணாளா
சுரம் ஒன்று உள்ளே நின்று ஸ்ருதியற்று தவிக்குதையா
சுப்ரமண்யா உனைப்பாடும் சொல் எனக்கருள்வாய் ஐயா
ஆவினன குடி வாழ் அரசே அண்ணலே எம் கதி நீயே
பாவியெனைக் கண் பாராய் பார்வதியாள் பெற்ற பாலா - தினை
மாவிலே ருசியைக் கண்ட மாலவன் மருமகனே
தாவி நீ மயில் மேல் வருவாய் தஞ்சமே நீயே முருகா
சொக்கனின் திருக்குமரா சுந்தர முருகா ஐயா
பக்கத் துணையாயிருப்பாய் பார்வதியாள் பெற்ற பாலா
இக்கணம் வந்து நீயும் இன்னருள் தருவாய் ஐயா
சிக்கலைத் தீர்த்து வைப்பாய் சிங்கார வேலா கந்தா
வயலூரில் வளரும் வேளே வாழ்விலே வளம் தருவாயே
கயல்விழி மீனாள் புதல்வா கருணை ததும்பும் கண்ணா - சிறு
பயலென ஔவை அழைத்த சிறுவனே நீ செய்யும்
செயல் எல்லாம் குறும்பேயன்றோ செல்வா விளையாட வாராய்
Comments