Kadal manal veliyil
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Kadal manal veliyil kanden - naan
kadal manal veliyil kanden
kadavulin karunai nadamidum azhagai
enadhuyir paruga idhayamum uruga
madhu nadhi vizhi vazhi paayum - adhil
maragadha oli vazhindhodum
imaigalum puruvamum pesum - adhai
iNdhira sabaigalum paadum paadum
damaruga oli alai paayum - adhil
thaaragaigal uruvaagum
dhimi dhimi dhimiyena aadum - indha
dhevanin naattiyam paarum paarum
oonriya thiruvadi keezhe - uyir
unarvugal maraivadhu kanden
thookkiya thiruvadi kanden - en
thunaiyena adhanaiye konden konden
karuvinil kuzhandhaigal kooda - oru
kalippinil thaalangal poda
thirumagal kalaimagal paada - indha
dhevanin naattiyam vaazhga vaazhga
Shankaram enbadhu peru - Siva
shankara mandhiram kooru
enganum ivan thiruneeru - adhil
eththanai arpudham kooru kooru
aadidum ivan arul vellam - ivan
asaivinil imayamum thullum
yedugal sonnadhu paadhi - nee
idhayaththil paarththidu meedhi meedhi
கடல் மணல் வெளியில் கண்டேன் - நான்
கடல் மணல் வெளியில் கண்டேன்
கடவுளின் கருணை நடமிடும் அழகை
எனதுயிர் பருக இதயமும் உருக
மது நதி விழி வழி பாயும் - அதில்
மரகத ஒளி வழிந்தோடும்
இமைகளும் புருவமும் பேசும் - அதை
இந்திர சபைகளும் பாடும் பாடும்
டமருக ஒலி அலை பாயும் - அதில்
தாரகைகள் உருவாகும்
திமி திமி திமியென ஆடும் - இந்த
தேவனின் நாட்டியம் பாரும் பாரும்
ஊன்றிய திருவடிக் கீழே - உயிர்
உணர்வுகள் மறைவது கண்டேன்
தூக்கிய திருவடி கண்டேன் - என்
துணையென அதனையே கொண்டேன் கொண்டேன்
கருவினில் குழந்தைகள் கூட - ஒரு
களிப்பினில் தாளங்கள் போட
திருமகள் கலைமகள் பாட - இந்த
தேவனின் நாட்டியம் வாழ்க வாழ்க
சங்கரம் என்பது பேரு - சிவ
சங்கர மந்திரம் கூறு
எங்கணும் இவன் திருநீறு - அதில்
எத்தனை அற்புதம் கூறு கூறு
ஆடிடும் இவன் அருள் வெள்ளம் - இவன்
அசைவினில் இமயமும் துள்ளும்
ஏடுகள் சொன்னது பாதி - நீ
இதயத்தில் பார்த்திடு மீதி மீதி
Comments