Kadaikkann Paarththidamma
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
கடைக்கண் பார்த்திடம்மா கனக துர்க்கா - நான்
கடையேனாயினும் உன்னுடையவள் ஆதலினால்
படைத்து காத்து உந்தன் பார்வையில் எனை வைத்து
அடைக்கலம் தந்தென்னை ஆட்கொண்ட மஹா சக்தி
உடைத்து வரும் வெள்ளம் குதித்துக் கரை புரண்டு
ஓடி வருவது போல் உன்னிடம் வந்து நின்றேன்
படைக்கலம் கையேந்தும் பரமேஸ்வரீ இனியும்
நடித்தது போதுமம்மா நாயகி சங்கரி நீ
Komentar