Kaavi uduththa pillai
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Kaavi uduththa pillai kadum thavam seyyum pillai
aavi uruga vaiththaane pazhaniyile
koovi azhaththavudan kurallu edhiroliyaay
kudhiththodi vandhaane parankunrile
naavile veloonri nayampadu thamizh kavidhai
nalla gurunaadhan thandhaan swaami malaiyile - malar
thooviye thozhudha undhan thuyar tholaithenenru
thogai mayil murugan sonnan thanigai malaiyile
aaviyil thaan pugundhu arpudham pala seidhu
aatkondu vittaane kazhaniyoorile
poovile pudhmanamaay ponnin migu oliyaay
thonrinaan suyambaay thirupporoorile
saavi koduththa bommai aadi suzhaludhal pol
jagaththile vaazhndhidenraan sendhoorile
thaavi anaiththa avan kaalile saayndhu naanum
kaanaamal ponenadi kelai nagarile
காவி உடுத்த பிள்ளை கடுந்தவம் செய்யும் பிள்ளை
ஆவி உருக வைத்தானே பழனியிலே
கூவி அழைத்தவுடன் குரலுக்கு எதிரொலியாய்
குதித்தோடி வந்தானே பரங்குன்றிலே
நாவிலே வேலூன்றி நயம்படு தமிழ் கவிதை
நல்ல குருநாதன் தந்தான் ஸ்வாமி மலையிலே - மலர்
தூவியே தொழுத உந்தன் துயர் தொலைத்தேனென்று
தோகை மயில் முருகன் சொன்னான் தணிகை மலையிலே
ஆவியில்தான் புகுந்து அற்புதம் பல செய்து
ஆட்கொண்டு விட்டானே கழனியூரிலே
பூவிலே புதுமணமாய் பொன்னின் மிகு ஒளியாய்
தோன்றினான் சுயம்பாய் திருப்போரூரிலே
சாவி கொடுத்த பொம்மை ஆடிச் சுழலுதல் போல்
ஜகத்திலே வாழ்ந்திடென்றான் செந்துரிலே
தாவி அணைத்த அவன் காலிலே சாய்ந்து நானும்
காணாமல் போனேனடி கேளை நகரிலே
コメント