Kaaththiruppaan Gananadhan
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
காத்திருப்பான் இங்கே கணநாதன்
கருணை புரிவதற்குத் தருணம் எதிர்பார்த்து
பூத்திருக்கும் விழியின் தாபம் கண்டு - நமை
பிணைத்திருக்கும் பிறவிப் பிணி அழிக்க
மாற்றுக் குறையாத பொன் மனத்தான்
மலரினும் மெல்லிய குணம் படைத்தான்-நம்மை
தேற்றி அரவணைக்கும் ஐங்கரத்தான் - நாம்
திகைத்து நிற்கும்போது நகைத்து எதிர் தோன்ற
யாண்டும் இடும்பையிலா வாழ்வருள்வான்
யார்க்கும் ஒரே நீதி எனப் புகல்வான்
தீண்டும் கொடு வினையின் பயன்களெல்லாம்
தீர்த்து அருள் செய்யும் மூர்த்தி சங்கரனாய்
Comments