Kaalaththai venru
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Kaalaththai venru nirkum Shankara kaaviyam
karuththil padhindhirukkum karunai oviyam
gnaalaththai uyarththa vandha gnaaniyin raajjiyam - indha
gnaayitrai kaanaadha vaazhvellaam poojjiyam
kolaththil maanusha vedam kondadhu
kodi magaanidam bakthi poondadhu
neelamaam oli thannai netriyil kondadhu
nilavin kulirinai nenjulle vaiththadhu
anbenum panbaale ulagai anaiththadhu
aala maramaagi nizhalul azhaiththadhu
aatralin thotramaay ulagil vandhadhu
arivin sigaramaay uyarndhu ninradhu
thavamaay vaazhkkaiyai vazhndhidu enradhu
tharaththil uyarave thannambikkai thandhadhu
sivame nee enru nammaiyum sonnadhu
sindhithu vaazhndhidu puriyum enradhu
காலத்தை வென்று நிற்கும் சங்கர காவியம்
கருத்தில் பதிந்திருக்கும் கருணை ஓவியம்
ஞாலத்தை உயர்த்த வந்த ஞானியின் ராஜ்ஜியம் - இந்த
ஞாயிற்றை காணாத வாழ்வெல்லாம் பூஜ்ஜியம்
கோலத்தில் மானுஷ வேடம் கொண்டது
கோடி மகானிடம் பக்தி பூண்டது
நீலமாம் ஒளிதன்னை நெற்றியில் கொண்டது
நிலவின் குளிரினை நெஞ்சுள்ளே வைத்தது
அன்பெனும் பண்பாலே உலகை அணைத்தது
ஆலமரமாகி நிழலுள் அழைத்தது
ஆற்றலின் தோற்றமாய் உலகில் வந்தது
அறிவின் சிகரமாய் உயர்ந்து நின்றது
தவமாய் வாழ்க்கையை வாழ்ந்திடு என்றது
தரத்தில் உயரவே தன்னம்பிக்கை தந்தது
சிவமே நீ என்று நம்மையும் சொன்னது
சிந்தித்து வாழ்ந்திடு புரியும் என்றது
Comments