Kaalamagall Varaindhu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
காலமகள் வரைந்து தந்த காவியம்
கருணையென்றும் ஒளிபரவும் ஓவியம்
கலியுகத்தின் போக்கை மாற்றும் காரணம்
கார்முகிலாய் அருள் பொழியும் காரியம்
இரக்கம் கொண்டு வந்ததுதான் காரணம்
ஈசனிவன்தான் பரிபூரணம்
அரக்கர்களை த்வம்சம் செய்த வாரணம்
ஆனந்தத் தென்றலிலாடும் தோரணம்
புதைத்து வைத்த ஞானமொடு முளைத்தவன் - நாம்
பூஜிக்க ஒரு தெய்வமாக உதித்தவன்
நகைத்தவர் கண்முன் எழுந்து சிரித்தவன்
நாநிலத்தில் அன்பு விதை விதைத்தவன்
புனயபூமி பாரதத்தின் சரித்திரம்
புரவலனிவன் ஆளுகையோ தனித்திறம்
கண்யம் கடமி பேணுகின்ற தத்துவம் - மாய
கண்ணந்தான் சிவசங்கர் இது சத்தியம்
Comments