top of page

Iththarai maandhargal

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Iththarai maandhargal inbamadaindhida

niththirai kollaa nedi thavam iyalvoy

eththinamum en naavu jebikkum

raththina manthram jeya sivashankaram


...jeya jeya shankara siva shankara om....


thuvalum nenja sumaigalai ellaam

thol meletri dhoosaay seivoy

pavalam polum un meni viyandhu

kavalum manthram jeya sivashankaram


aththanum ammaiyum aagiya uruvil

anaiththu kaakkum arum porchudare

niththam engal nenjam thanil olir

muththaam manthram jeya sivashankaram


paragadhi petridum maarkkam thannai

parivaay uraikkum perumaa undhan

niraimadhi mugame ninaindhu uraiththom

maragadha manthram jeya sivashankaram


veniyal maa thavam seidhidum kaanchiyil

vilaindhu inikkum aval kai karumbe

neenilam yaavum nin pugazh koorum

maanikka manthram jeya siva shankaram


bairavi avale undhan uruvil

parpala arpudham seidhida vandhaal

meithanil suzhalum kurudhiyil thoyndha

vaira manthram jeya sivashankaram


baala paruvam mudhale iraiyin

kola thiruvarul enni magizhndhoy

seela thavam unai seppidum manthram

neela oliye jeya sivashankaram



இத்தரை மாந்தர்கள் இன்பமடைந்திட

நித்திரை கொள்ளா நெடிதவம் இயல்வோய்

எத்தினமும் என் நாவு செபிக்கும்

ரத்தின மந்த்ரம் ஜெய சிவசங்கரம்



....ஜெய ஜெய சங்கர சிவ சங்கர ஓம்....



துவளும் நெஞ்ச சுமைகளையெல்லாம்

தோள் மேலேற்றி தூசாய்ச் செய்வோய்

பவளம் போலும் உன் மேனி வியந்து

கவலும் மந்த்ரம் ஜெய சிவசங்கரம்


அத்தனும் அம்மையும் ஆகிய உருவில்

அணைத்துக் காக்கும் அரும் பொற்சுடரே

நித்தம் எங்கள் நெஞ்சம் தனில் ஒளிர்

முத்தாம் மந்த்ரம் ஜெய சிவசங்கரம்


பரகதி பெற்றிடும் மார்க்கம் தன்னை

பரிவாய் உரைக்கும் பெருமா உந்தன்

நிறைமதி முகமே நினைந்து உரைத்தோம்

மரகத மந்த்ரம் ஜெய சிவசங்கரம்


வேணியள் மாதவம் செய்திடும் காஞ்சியில்

விளைந்து இனிக்கும் அவள் கைக்கரும்பே

நீணிலம் யாவும் நின் புகழ் கூறும்

மாணிக்க மந்த்ரம் ஜெய சிவசங்கரம்


பைரவி அவளே உந்தன் உருவில்

பற்பல அற்புதம் செய்திட வந்தாள்

மெய்தனில் சுழலும் குருதியில் தோய்ந்த

வைர மந்த்ரம் ஜெய சிவசங்கரம்


பால பருவம் முதலே இறையின்

கோலத்திருவருள் எண்ணி மகிழ்ந்தோய்

சீலத்தவம் உனை செப்பிடும் மந்த்ரம்

நீல ஒளியே ஜெய சிவசங்கரம்

 
 
 

Recent Posts

See All
Idhayavaasi nee

Idhayavaasi nee - endhan iru vizhigalum nee udhaya gnaayirin migundha oli udaiyaval nee padham tharum veni - para bramma rupini madhana...

 
 
 
Idho indha idamthaandi

Audio: https://drive.google.com/file/d/1grSAUPLp7g0snpak_JTmIVS5uWC5JKpx/view?usp=sharing Idho indha idamthaandi panjavadi - idhan...

 
 
 
Illaraththu gnaani

Illaraththu gnaani engal sidhdhayodi arpudham eedillaadha karma yogi dheivam ennum thathuvam villaraththu raman chennai veedhi vandha...

 
 
 

Commentaires


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page