Iravum Pagalum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
இரவும் பகலும் உன் திருவடிதன்னை
பற்றிப் பாடிட பாதை காட்டினை
உறவு நீயென உரிமை தந்துமே
உந்தன் மடியிலே உறங்க வைத்தனை
கரவு இல் மனம் கந்தா தந்து உன்
காலடி தொடர வலிந்திழுத்தனை
செறிவு சேர் மலர்ப் பத அழகா
ஸ்ரீ சிவசங்கரா வாழ்க வாழ்கவே
கனலெனச் சிவந்த நின் முகம்
கனிந்து உருகி நீ எதிரே வந்தனை
தினவில் நைந்து தேம்பிய நெஞ்சைத்
தேற்றி ஆட்கொளத் தேடி வந்தனை - எம்
நினைவிலே நின் உருவைப் பதித்துமே
நீண்ட தாகம் தணிய வைத்தனை
புனலெனப் பெருகும் அன்பு மழையிலே
பெம்மானே மனம் குளிர வைத்தனை
Comments