Iraivanai nee
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Iraivanai nee adaivadharku
edutha udambu maanudam
idhai neeyum unaraamal
ketkinraay jodhidam
anbillaa maandharukku
agilamellaam vetridam
aasaigalai thurandhu vaazha
irukka vendum mana thidam
peraasayil porul serkka
seidhaay pala kalappadam
porumaiyaaga yosiththaal
unakke adhu pulappadum
thappu seidhu olindhu vaazha
ulagil yedhu maraividam
thavarugakte mannippu
aandavanaal tharappadum
iraivan thandha selvangkal
enna illai unnidam
yen aasai vaiththaayo
nee pudhaiyum mannidam
needhi dhevan Sivashankaridam
un vazhakku tharappadum
nermaiyaaga nadandhaal dhaan
un jenmam uruppadum
இறைவனை நீ அடைவதற்கு எடுத்த உடம்பு மானுடம்
இதை நீயும் உணராமல் கேட்கின்றாய் ஜோதிடம்
அன்பில்லா மாந்தருக்கு அகிலமெல்லாம் வெற்றிடம்
ஆசைகளைத் துறந்து வாழ இருக்க வேணும் மனத்திடம்
பேராசையில் பொருள் சேர்க்க செய்தாய் பல கலப்படம்
பொறுமையாக யோசித்தால் உனக்கே அது புலப்படும்
தப்பு செய்து ஒளிந்து வாழ உலகில் ஏது மறைவிடம்
தவறுகட்கே மன்னிப்பு ஆண்டவனால் தரப்படும்
இறைவன் தந்த செல்வங்கள் என்ன இல்லை உன்னிடம்
ஏன் ஆசை வைத்தாயோ நீ புதையும் மண்ணிடம்
நீதி தேவன் சிவசங்கரிடம் உன் வழக்கு தரப்படும்
நேர்மையாக நடந்தால் தான் உன் ஜென்மம் உருப்படும்
Comments