Iraivaa yen
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Iraivaa yen silaiyaanaay - nin
idhayam irugi ponadhinaalaa
ingum angum alaindhiduvaar - mana
irulil iraivanai thediduvaar
inba saagaran thandha arulinaiye - than
izhinilai manaththaal alandhiduvaar
ulaga maayaiyil uzhanriduvaar - adhil
ullavai yuaavaiyum izhandhiduvaar
unnarul petre uyarndhiduvaar - nilai
uyarndhadhume unai marandhiduvaar
paavam pokkida parithavippaar - nin
paarvaiyaal paavam pokkiduvaar
nalam pala vendi petradhume - sei
nanri marandhe thootriduvaar
இறைவா ஏன் சிலையானாய் - நின்
இதயம் இறுகிப் போனதினாலா
இங்கும் அங்கும் அலைந்திடுவார் - மன
இருளில் இறைவனை தேடிடுவார்
இன்ப சாகரன் தந்த அருளினையே - தன்
இழிநிலை மனத்தால் அளந்திடுவார்
உலக மாயையில் உழன்றிடுவார் - அதில்
உள்ளவை யாவையும் இழந்திடுவார்
உன்னருள் பெற்றே உயர்ந்திடுவார் - நிலை
உயர்ந்ததுமே உனை மறந்திடுவார்
பாவம் போக்கிட பரிதவிப்பார் - நின்
பார்வையால் பாவம் போக்கிடுவார்
நலம் பல வேண்டி பெற்றதுமே - செய்
நன்றி மறந்தே தூற்றிடுவார்
Comments