Inrae Nee Vandhidu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
இன்றே நீ வந்திடு இந்த ஏழை முகம் பார்த்திடு
அன்றே எனைத் தடுத்து ஆட்கொண்ட சிவசங்கரி
[நீ] ஒன்றே சக்தியென இந்த உலகில் உணர்த்திவிடு - நாமம்
ஓதி பயன்பெறவே தெளிந்த உள்ளத்தைத் தந்து விடு - அம்மா
நன்றே செய்ய வைத்து உன்னை நாட வரம் அளித்து
சென்றே சரண் புகவே உன் சேவடியைத் தந்திடு
கன்றெனக் கதறிவந்தேன் ஓ காளிகா பரமேஸ்வரி - என்
கண்ணீர் துடைத்து விடு அம்மா கவலைகள் தீர்த்து விடு
Comments