Imaya malai
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Imaya malai koduththa ilavarasi - ivall
engalukkaaga vandha iraiyarasi
samayaththil kai kodkkum arularasi - Siva
Shankaranaar idhayam aall arasi
pooththu kulunguginra ezhilarasi - endhan
pon mana maaligaiyin paerarasi
manjall mugaththazhagu manaiyrasi
managala vilakkaagum mangaiyarkkarasi
sanga thamizhkku uyar vaazhvarasi
saaththiram varunikkum azhagarasi
thanga manam padaiththa anbarasi - ivall
mangaiyar poojikkum maadharasi
ulagam padaiththavanin illa arasi - avan
uyiraiyum kaaththida valla arasi
ooyaamal naan paadum nalla arasi - endhan
udan vilaiyaada vandha cella arasi
இமயமலை கொடுத்த இளவரசி - இவள்
எங்களுக்காக வந்த இறையரசி
சமயத்தில் கை கொடுக்கும் அருளரசி - சிவ
சங்கரனார் இதயம் ஆள் அரசி
பூத்துக் குலுங்குகின்ற எழிலரசி - எந்தன்
பொன் மன மாளிகையின் பேரரசி
மஞ்சள் முகத்தழகு மனையரசி
மங்கல விளக்காகும் மங்கையர்க்கரசி
சங்கத் தமிழ்க்கு உயர் வாழ்வரசி
சாத்திரம் வருணிக்கும் அழகரசி
தங்க மனம் படைத்த அன்பரசி - இவள்
மங்கையர் பூசிக்கும் மாதரசி
உலகம் படைத்தவனின் இல்ல அரசி - அவன்
உயிரையும் காத்திட வல்ல அரசி
ஓயாமல் நான் பாடும் நல்ல அரசி - எந்தன்
உடன் விளையாட வந்த செல்ல அரசி
Comments