Eppodhum muppodhum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Eppodhum muppodhum ennodiru - en
munnodu pinnodu kannodiru
thappaamal naan paadum pannodiru - nalla
thamizh ketka thamizhagaththu mannodiru
paattezhudhum anubavathil sollaayiru - enrum
pattiniyin koottaniyil nillaadhiru
paattaali vervai kanda nellaayiru - Baba
pallaandu pallaandu nallaayiru
naan ennum agandhaikku theeyaayiru - amudha
gnaanappaal oottuginra thaayaayiru
naan konjam konjugaiyil seyaayiru - enakkul
naanenru pesubavan neeyaayiru
எப்போதும் முப்போதும் என்னோடிரு - என்
முன்னோடு பின்னோடு கண்ணோடிரு
தப்பாமல் நான் பாடும் பண்ணோடிரு - நல்ல
தமிழ் கேட்க தமிழகத்து மண்ணோடிரு
பாட்டெழுதும் அனுபவத்தில் சொல்லாயிரு - என்றும்
பட்டினியின் கூட்டணியில் நில்லாதிரு
பாட்டாளி வேர்வை கண்ட நெல்லாயிரு - பாபா
பல்லாண்டு பல்லாண்டு நல்லாயிரு
நான் என்னும் அகந்தைக்கு தீயாயிரு - அமுத
ஞானப்பால் ஊட்டுகின்ற தாயாயிரு
நான் கொஞ்சம் கொஞ்சுகையில் சேயாயிரு - எனக்குள்
நானென்று பேசுபவன் நீயாயிரு
Comments