Enneramum unai
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
[Yethiruga..tune]
Enneramum unai ninaindhu urugidum
manam tharuvaay Sivashankara
ekkaalamum unai thodarndhida emakku
arul purivaay Sivashankara
ulagelaam amaidhiyai thedi alaindhanare
ariyaamaiyil Sivashankara - adhu
unnidam mattume kidaikkum enbadhai
unaraare Sivashankara
thondarin thondanaay sevai seivaaye
thooyavane Sivashankara - unai
andidum maandhar nalam yaavum perave
arul purivaay Sivashankara
aayiram aayiram aandugal thaviththom
unai kandidave Shankara
yezhaayiram aandugal kadandhadhum engalai
kandida vandhaayo Shankara
kannedhiril unai kandida palarum
yengiduvaar Sivashankara - avar
manam magizhndhidave kadhiravanil mugam
kaattida vizhaindhaayo Shankara
எந்நேரமும் உனை நினைந்து உருகிடும்
மனம் தருவாய் சிவ சங்கரா
எக்காலமும் உனை தொடர்ந்திட எமக்கு
அருள் புரிவாய் சிவ சங்கரா
உலகெலாம் அமைதியை தேடி அலைந்தனரே
அறியாமையில் சிவ சங்கரா - அது
உன்னிடம் மட்டுமே கிடைக்கும் என்பதை
உணராரே சிவ சங்கரா
தொண்டரின் தொண்டனாய் சேவை செய்வாயே
தூயவனே சிவ சங்கரா - உனை
அண்டிடும் மாந்தர் நலம் யாவும் பெறவே
அருள் புரிவாய் சிவ சங்கரா
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தவித்தோம்
உனைக் கண்டிடவே சங்கரா
ஏழாயிரம் ஆண்டுகள் கடந்ததும் எங்களை
கண்டிட வந்தாயோ சங்கரா
கண்ணெதிரில் உனை கண்டிட பலரும்
ஏங்கிடுவார் சிவ சங்கரா - அவர்
மனம் மகிழ்ந்திடவே கதிரவனில் முகம்
காட்டிட விழைந்தாயோ சங்கரா
Comments