Ennavenru theriyavillai
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Ennavenru theriyavillai yedhedho seigiraan
enneramum ninaindhu yekkam kolla vaikkiraan
ennamadhile niraindhu yekaanthamaay nirkiraan
kannirandai asaithasaithu kaanthamaay izhukkiraan
karuththile irundhu dhinam sarkaraiyaay inikkiraan
thenoththa uraiyinile dheiveegamaay kamazhgiraan
thevaiyadhai ketka vandhaal ketkum munne tharugiraan
shantha swarupanavan sarva uruvaay nirkiraan
shanthiyadhai ketka vandhaal saththiyamaay tharugiraan
sarvaantha gnaaniyavan saasvadhamaay irukkiraan
sidhdha sudhdhi konda avan chithathai aalgiraan
anralarndha poovinai pol anbudan azhaikkiraan
senravudan serthanaiththu kshemamadhai ketkiraan
manram vandha thenralai pol madi manjamaay tharugiraan
santhathamum theriyum unmai kaamadhenuvai pol kaakkiraan
என்னவென்று தெரியவில்லை ஏதேதோ செய்கிறான்
எந்நேரமும் நினைந்து ஏக்கம் கொள்ள வைக்கிறான்
எண்ணமதிலே நிறைந்து ஏகாந்தமாய் நிற்கிறான்
கண்ணிரண்டை அசைத்தசைத்து காந்தமாய் இழுக்கிறான்
கருத்திலே இருந்து தினம் சர்க்கரையாய் இனிக்கிறான்
தேனொத்த உரையினிலே தெய்வீகமாய் கமழ்கிறான்
தேவையதை கேட்கவந்தால் கேட்குமுன்னே தருகிறான்
சாந்த ஸ்வரூபனவன் சர்வ உருவாய் நிற்கிறான்
சாந்தியதை கேட்க வந்தால் சத்தியமாய் தருகிறான்
சர்வாந்த ஞானியவன் சாஸ்வதமாய் இருக்கிறான்
சித்த சுத்தி கொண்ட அவன் சித்தத்தை ஆள்கிறான்
அன்றலர்ந்த பூவினைப்போல் அன்புடன் அழைக்கிறான்
சென்றவுடன் சேர்த்தணைத்து க்ஷேமமதை கேட்கிறான்
மன்றம் வந்த தென்றலைப்போல் மடி மஞ்சமாய் தருகிறான்
சந்ததமும் தெரியும் உண்மை - காமதேனுவைப்போல் காக்கிறான்
Comments