Ennaiye enakkalikka
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Ennaiye enakkalikka
iraivan ingu vandhaanamma
thannaiye thandhu vida
thalaivanaagi ninraanamma
annai enrum thandhai enrum
aayiramthaan sondham amma
unnai enrum kaakkum Siva
Shankaranthann sondham amma
kaasu panam irukkum varai
kooda varum sondhamundu
kadaisi moochchu varai
kooda varum sondhamundo
pesum indha sondhamellaam
pinnaalil oadi vidum
periya sondham shankarandhaan
annaalil purindhu vidum
thannaiththaan ariyaadhu
thalaivanaiyum unaraadhu
unnaiyum serththu maaya
valaiyil maatuum ulagamidhu
kannai imai kaappadhu pol
nammai kaakkum kadavuledhu
vennaiyena idhangalai
vizhungum Siva Shankaramidhu
என்னையே எனக்களிக்க இறைவன் இங்கு வந்தானம்மா
தன்னையே தந்து விட தலைவனாகி நின்றானம்மா
அன்னை என்றும் தந்தை என்றும் ஆயிரம்தான் சொந்தம் அம்மா
உன்னை என்றும் காக்கும் - சிவ சங்கரன்தான் சொந்தம் அம்மா
காசு பணம் இருக்கும் வரை கூட வரும் சொந்தமுண்டு
கடைசி மூச்சு வரை கூட வரும் சொந்தமுண்டோ
பேசும் இந்த சொந்தமெல்லாம் பின்னாளில் ஓடி விடும்
பெரிய சொந்தம் சங்கரன்தான் அந்நாளில் புரிந்து விடும்
தன்னைத்தான் அறியாது தலைவனையும் உணராது
உன்னையும் சேர்த்து மாய வலையில் மாட்டும் உலகமிது
கண்ணை இமை காப்பது போல் நம்மை காக்கும் கடவுளெது
வெண்ணையென இதயங்களை விழுங்கும் சிவ சங்கரமிது
Comments