top of page

Ennaayiraththaandu

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Ennaayiraththaandu yogam irundhu

kannaaramudhanai kaana thudithen

ezhukodi yaagangal iyatriye vendi

yelaadhu seyalatru yaan vimmi ninren


pannpaadi palakodi naamangal koovi

parandhaamanai kaana yengi irundhen

unnaadhu urangaadhu viradhangal notru

ulagalandha paadhathai thedi thaviththen


eththanaiyo thiru thalangal yaan thedi sendru

yedhedho vendudhalgal niraivetri vandhen

piththam pidiththu peyaay alaindhum

chithathil avan kaatchi onre vizhaindhen


kaavadigal thookki karagangal yendhi

sevadi theendum naalai edhirpaarthen

maavadiyil ninra maamuniyin jothi

mannadiyil serndha kanavonru kanden


mannadi nokki en kaalgal viraiya - iru

malaradigal enai nokki edhir vara kanden

ennadi adhisayam yedhadi vinodham

vinnadi mulaitha sengkadhirangu kanden


aaladi amarndhu moovadi alandhu

kaaladiyil thonri sheeradiyil vandhu

maavadi muniyaay kodi guruvadiyaay

mannadiyil ninra thiruvadigal kanden


theduthale thavamaaga dhinam dhinamum vaazhndhen

theduvadhu kidaikkumena thelivudan irundhen

theduvadhil sodhanaigal vandhaalum poruththen - naan

thediyadhu en kula dheivam enrarindhen



எண்ணாயித்தாண்டு யோகம் இருந்து

கண்ணாரமுதனைக் காணத் துடித்தேன்

எழுகோடி யாகங்கள் இயற்றியே வேண்டி

ஏலாது செயலற்று யான் விம்மி நின்றேன்


பண்பாடி பலகோடி நாமங்கள் கூவி

பரந்தாமனைக் காண ஏங்கியிருந்தேன்

உண்ணாது உறங்காது விரதங்கள் நோற்று

உலகளந்த பாதத்தைத் தேடித் தவித்தேன்


எத்தனையோ திருத்தலங்கள் யான் தேடிச்சென்று

ஏதேதோ வேண்டுதல்கள் நிறைவேற்றி வந்தேன்

பித்தம் பிடித்துப் பேயாய் அலைந்தும்

சித்தத்தில் அவன் காட்சி ஒன்றே விழைந்தேன்


காவடிகள் தூக்கிக் கரகங்கள் ஏந்தி

சேவடி தீண்டும் நாளை எதிர்பார்த்தேன்

மாவடியில் நின்ற மாமுனியின் ஜோதி

மண்ணடியிற் சேர்ந்த கனவொன்று கண்டேன்


மண்ணடி நோக்கி என் கால்கள் விரைய - இரு

மலரடிகள் எனை நோக்கி எதிர் வரக் கண்டேன்

என்னடி அதிசயம் ஏதடி விநோதம்

விண்ணடி முளைத்த செங்கதிரங்கு கண்டேன்


ஆலடி அமர்ந்து மூவடி அளந்து

காலடியிற் தோன்றி ஷீரடியில் வந்து

மாவடி முனியாய் கோடி குருவடியாய்

மண்ணடியில் நின்ற திருவடிகள் கண்டேன்


தேடுதலே தவமாகத் தினம் தினமும் வாழ்ந்தேன்

தேடுவது கிடைக்குமெனத் தெளிவுடன் இருந்தேன்

தேடுவதில் சோதனைகள் வந்தாலும் பொறுத்தேன் - நான்

தேடியது என் குல தெய்வமென்றறிந்தேன்


 
 
 

Recent Posts

See All
Edhu maadhiriyum

Edhu maadhiriyum illaadha oru pudhu maadhiriyaay irukkinraay - nee adhu maadhiri idhu maadhiri ena aayiram paer enna sonnaalum - nee oru...

 
 
 
Edutha kaariyam

Edutha kaariyam yaavilum vetri engal Sivashankar thaalinai patri thodutha maalaigal soodidum paraman - kai kodutha velaigal kondaadidum...

 
 
 
Eeraththil midhakkinra

Audio: https://drive.google.com/file/d/1eDQv6BD9RnTHoV4FwlwV1gd8jufo0aLh/view?usp=sharing Eeraththil midhakkinra idhayame -engal Deivame...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page