top of page

Enna thavam seigiraay

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Updated: Feb 21, 2019

Enna thavam seigiraay nee Shankara - adhai

ippozhudhe solla vendum Shankara

kannirandil karunai pongum Shankara - unai

kaanbadhu dhaan engal thavam Shankara Shankara


sashtiyile nonbiruppaay Shankara - engal

shanmuganum nee allavo Shankara Shankara

kashtamennum sooran vizha Shankara - engal

kannmani nee vaadalaamo Shankara


kadalaruge enna thavam Shankara - neelaang

karai amarndha kaaranamen Shankara Shankara

udaluruga enna thavam Shankara - engal

oozhvinaiyai pokkidavo Shankara


maarupadu sooran vadham Shankara - andha

mandhiravel seidhadhadaa Shankara Shankara

nooru nooru sooran vadham Shankara - un

nonbinaale nigazha vendum Shankara


petra velai enna seidhaay Shankara - innum

periya velai ketkiraayo Shankara Shankara

vetri vaagai naangal sooda Shankara - nee

veera velai yendha vendum Shankara


katra pinnum karpadhunda Shankara - andha

kalaimagal dhaan karpadhunda Shankara Shankara

petra pinnum peruvadhunda Shankara - nee

peruvadharku enna undu Shankara


thannai nokki thavamiruppaan Shankara - andha

dharma murthi saambasivan Shankara Shankara

unnai nokki thavamiruppaay Shankara - idhu

oozhi oozhi kaala thavam Shankara



என்ன தவம் செய்கிறாய் நீ சங்கரா - அதை

இப்பொழுதே சொல்ல வேண்டும் சங்கரா

கண்ணிரண்டில் கருணை பொங்கும் சங்கரா - உனைக்

காண்பது தான் எங்கள் தவம் சங்கரா சங்கரா


சஷ்டியிலே நோன்பிருப்பாய் சங்கரா - எங்கள்

சண்முகனும் நீ அல்லவோ சங்கரா சங்கரா

கஷ்டமென்னும் சூரன் விழ சங்கரா - எங்கள்

கண்மணி நீ வாடலாமோ சங்கரா


கடலருகே என்ன தவம் சங்கரா - நீலாங்

கரையமர்ந்த காரணமேன் சங்கரா சங்கரா

உடலுருக என்ன தவம் சங்கரா -எங்கள்

ஊழ்வினையைப் போக்கிடவோ சங்கரா


மாறுபடு சூரன் வதம் சங்கரா - அந்த

மந்திரவேல் செய்ததடா சங்கரா சங்கரா

நூறு நூறு சூரன் வதம் சங்கரா - உன்

நோன்பினாலே நிகழ வேண்டும் சங்கரா


பெற்ற வேலை என்ன செய்தாய் சங்கரா - இன்னும்

பெரிய வேலைக் கேட்கிறாயோ சங்கரா சங்கரா

வெற்றி வாகை நாங்கள் சூட சங்கரா - நீ

வீர வேலை ஏந்த வேண்டும் சஙக்ரா


கற்ற பின்னும் கற்பதுண்டா சங்கரா - அந்த

கலைமகள் தான் கற்பதுண்டா சங்கரா சங்கரா

பெற்ற பின்னும் பெறுவதுண்டா சங்கரா - நீ

பெறுவதற்கு என்ன உண்டு சங்கரா


தன்னை நோக்கி தவமிருப்பான் சங்கரா - அந்த

தர்ம மூர்த்தி சாம்பசிவன் சங்கரா சங்கரா

உன்னை நோக்கி தவமிருப்பாய் சங்கரா - இது

ஊழி ஊழிக் கால தவம் சங்கரா


 
 
 

Recent Posts

See All
Edhu maadhiriyum

Edhu maadhiriyum illaadha oru pudhu maadhiriyaay irukkinraay - nee adhu maadhiri idhu maadhiri ena aayiram paer enna sonnaalum - nee oru...

 
 
 
Edutha kaariyam

Edutha kaariyam yaavilum vetri engal Sivashankar thaalinai patri thodutha maalaigal soodidum paraman - kai kodutha velaigal kondaadidum...

 
 
 
Eeraththil midhakkinra

Audio: https://drive.google.com/file/d/1eDQv6BD9RnTHoV4FwlwV1gd8jufo0aLh/view?usp=sharing Eeraththil midhakkinra idhayame -engal Deivame...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page