Enna rusi kandaayada
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Enna rusi kandaayada kanna - Shankara
yedhu rusi kandaayada ponna engal ponna
chinna chinna kaal viralai
cheppu vaayile thiniththu
menru menru suvaiththa rusi
mella kaadhil solvaayada
annai ariyaamale nee mannai alli thinra rusiyo
vennai thirudi unda vedikkai kadhai rusiyo
vinnalandha padham veezhndha amirdha mazhai rusiyo
veetrirukkum idhayangalai vetri kanda perum rusiyo
kaalinga narthana aanandham perum rusiyo
solingaraay malai mele thavam seidha thani rusiyo
sorgaththai keezhirakki sokki ninra rusiyo
sollaamal vitta rusi enna rusi enna rusiyo
vidhuran veettinile virundhunda anbu rusiyo
vilaiyaattay bharatha por vilaiththa kadhai rusiyo
gopiyarodaadiya raasa leelai rusiyo
govindha un padhathil enna rusi enna rusiyo
என்ன ருசி கண்டாயடா கண்ணா - சங்கரா
ஏது ருசி கண்டாயடா கண்ணா எங்கள் பொன்னா
சின்ன சின்ன கால் விரலை செப்பு வாயிலே திணித்து
மென்று மென்று சுவைத்த ருசி மெல்லக் காதில் சொல்வாயடா
அன்னை அறியாமலே நீ மண்ணை அள்ளி தின்ற ருசியோ
வெண்ணை திருடி உண்ட வேடிக்கை கதை ருசியோ
விண்ணளந்த பதம் வீழ்ந்த அமிர்த மழை ருசியோ
வீற்றிருக்கும் இதயங்களை வெற்றி கண்ட பெரும் ருசியோ
காளிங்க நர்த்தன ஆனந்தம் பெரும் ருசியோ
சோளிங்கராய் மலை மேலே தவம் செய்த தனி ருசியோ
சொர்க்கத்தை கீழிறக்கி சொக்கி நின்ற ருசியோ
சொல்லாமல் விட்ட ருசி என்ன ருசி என்ன ருசியோ
விதுரன் வீட்டினிலே விருந்துண்ட அன்பு ருசியோ
விளையாட்டாய் பாரதப்போர் விளைத்த கதை ருசியோ
கோபியரோடாடிய ராஸ லீலை ருசியோ
கோவிந்தா உன் பதத்தில் என்ன ருசி என்ன ருசியோ
コメント