Enna Paarvaiyo
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
என்ன பார்வையோ இது என்ன பார்வையோ-உன்
இருவிழி மலர் போக்கியதென் இதய சோர்வையோ
கலியுகம் எதிர்பார்த்து நின்ற கருணை தேவையோ
காலமறிந்து தீர்ப்பிடும் கட்டாய தேவையோ
சத்தியமே பேசுக எனும் எச்சரித்தலோ - என்னுள்
சகலமுமே அடக்கம் என்பதன் உச்சரித்தலோ
தேகமெல்லாம் மயிலிறகால் வருடும் தீண்டலோ-நான்
தேடி தேடி கண்டு கொண்ட இளைப்பாறுதலோ
அன்பு செய்து வாழ்க என்ற அறிவுருத்தலோ
ஆன்மா தன் நிலையறிய சிறு திருத்தலோ
நம்பி விடு காப்பேன் எனும் வாக்குரைத்தலோ
நானிருக்க பயமேன் எனும் பேராறுதலோ
Comments