Enna maaya sirippo
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Enna maaya sirippo - en
idhayathin uyir thudippo
china idhazh udhirkkum - ezhil
chithira poo virippo
mullai nagai sirippo
muththukkalin kuvippo
killai mozhiyinile - mizhatrum
geethangalin thoguppo
kallathana sirippo - manadhai
kannamidum nadippo
ullaththul ulladhellaam veliye
udhira vaikkum sirippo
vinn adhirum sirippo - vidhi
maatrum peru nagaippo
kanna suzhal thanile - emai
katti vaikka ninaippo
vanna kalavaigalaay - ulagai
vadiththadhil mei silirppo - en
enna alaigalaiye than vasam
eerkkum irai sirippo
imayaththin uchiyinrum - inge
ezhundha alai sirippo
samaya pinakkugalai kadindhu
saadum perum sirippo
engal piravigalai arindha
iraivaa kurum sirippo - em
idhayam padum paadu arindhum
yendhale perum sirippo
mangala naayagane - vidhi
maatruvadhil malaippo - oh
maanikkame Shankara - idhu un
maaraadha punsirippo
என்ன மாயச் சிரிப்போ - என்
இதயத்தின் உயிர்த் துடிப்போ
சின்ன இதழ் உதிர்க்கும் - எழில்
சித்திரப் பூ விரிப்போ
முல்லை நகைச் சிரிப்போ - இது
முத்துக்களின் குவிப்போ
கிள்ளை மொழியினிலே - மிழற்றும்
கீதங்களின் தொகுப்போ
கள்ளத்தனச் சிரிப்போ - மனதைக்
கன்னமிடும் நடிப்போ
உள்ளத்துள் உள்ளதெல்லாம் வெளியே
உதற வைக்கும் சிரிப்போ
விண் அதிரும் சிரிப்போ - விதி
மாற்றும் பெரு நகைப்போ
கன்னச் சுழல்தனிலே - எமைக்
கட்டி வைக்க நினைப்போ
வண்ணக் கலவைகளாய் - உலகை
வடித்ததில் மெய் சிலிர்ப்போ - என்
எண்ண அலைகளையே தன் வசம்
ஈர்க்கும் இறைச் சிரிப்போ
இமயத்தின் உச்சியின்றும் - இங்கே
எழுந்த அலைச்சிரிப்போ
சமயப் பிணக்குகளைக் கடிந்து
சாடும் பெருஞ்சிரிப்போ
எங்கள் பிறவிகளை அறிந்த
இறைவா குறுஞ்சிரிப்போ - எம்
இதயம் படும்பாடு அறிந்தும்
ஏந்தலே பெரும் ரசிப்போ
மங்கள நாயகனே - விதி
மாற்றுவதில் மலைப்போ - ஓ
மாணிக்கமே சங்கரா - இது உன்
மாறாத புன்சிரிப்போ
Comentarios