Enge naan irundhaalum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Enge naan irundhaalum ivan gnaabagam
eththisaiyil paarthaalum ivan vyaabagam
eppozhudhum en naavil Sivashankaram
eppadiyum enai kaakkum avan senkaram
ulagamellaam ezhudhi vaippen avan paadalai
ulamuvandhu rasiththiruppen avan aadalai
silai enakku uyir kodutha siththaadalai
sindhithen sindhithen pulanaagavillai
kangalai naan moodinaalum avan kaatchiye
kaadhugalil inikkum thamizh sollaatchiye
vinn thodave valarndha avan viswarupame - kandu
viyandhu charanadaindhen naan avan paadhame
en kangal thudaikkaiyile iniya thaay avan
en madiyil urangugayil ilam sey avan
than uyaram thaan mattum thaan arindhavan
nam nilaikku tharai irangi vandha irai avan
எங்கே நான் இருந்தாலும் இவன் ஞாபகம்
எத்திசையில் பார்த்தாலும் இவன் வ்யாபகம்
எப்பொழுதும் என் நாவில் சிவசங்கரம்
எப்படியும் எனை காக்கும் அவன் செங்கரம்
உலகமெல்லாம் எழுதி வைப்பேன் அவன் பாடலை
உளமுவந்து ரசித்திருப்பேன் அவன் ஆடலை
சிலை எனக்கு உயிர் கொடுத்த சித்தாடலை
சிந்தித்தேன் சிந்தித்தேன் புலனாகவில்லை
கண்களை நான் மூடினாலும் அவன் காட்சியே
காதுகளில் இனிக்கும் தமிழ் சொல்லாட்சியே
விண் தொடவே வளர்ந்த அவன் விஸ்வரூபமே - கண்டு
வியந்து சரணடைந்தேன் நான் அவன் பாதமே
என் கண்கள் துடைக்கையிலே இனிய தாய் அவன்
என் மடியில் உறங்குகையில் இளம் சேய் அவன்
தன் உயரம் தான் மட்டும் தான் அறிந்தவன்
நம் நிலைக்கு தரையிரங்கி வந்த இறையவன்
Comments