Engal Siva Shankarar
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Engal Siva Shankarar thunaiyodu
engal gurunadharin ninaivodu
bandha paasam isaiyodu
samratchana enakkoru thaay veedu
engirundhen yen pirandhen
enakkonrum theriyaadhe
nee nadathum naadagathil
nadippadhudhaan perum paadu
kaalam maarum kaatchi maarum
Shankarar aatchi maaraadhe
swaasam ennul oayum varaiyil
Baba naamam onre minjum
Baba naamam santhosham
aattuvithaay aadugiren
saattaiyidam pambaram naan
yetri vaithaay paadugiren
yezhai manam sambalamthaan
medai thorum paadal maarum
thaalam naadham maaraadhe
kaalam kadandhu vandha podhum
nesam mattum unnai sutrum
nesam unnai neengaadhe
எங்கள் சிவ சங்கரர் துணையோடு எங்கள் குருநாதரின் நினைவோடு
பந்த பாசம் இசையோடு சம்ரட்சணா எனக்கொரு தாய்வீடு
எங்கிருந்தேன் ஏன் பிறந்தேன் எனக்கொன்றும் தெரியாதே
நீ நடத்தும் நாடகத்தில் நடிப்பதுதான் பெரும்பாடு
காலம் மாறும் காட்சி மாறும் சங்கரர் ஆட்சி மாறாதே
ஸ்வாசம் என்னுள் ஓயும் வரையில் பாபா நாமம் ஒன்றே மிஞ்சும்
பாபா நாமம் சந்தோஷம்
ஆட்டுவித்தாய் ஆடுகிறேன் சாட்டையிடம் பம்பரம் நான்
ஏற்றி வைத்தாய் பாடுகிறேன் ஏழை மனம் சம்பளம்தான்
மேடை தோறும் பாடல் மாறும் தாளம் நாதம் மாறாதே
காலம் கடந்து வந்த போதும் நேசம் மட்டும் உன்னை சுத்தும்
நேசம் உன்னை நீங்காதே
Comentarios