Endhendha arpudham
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Endhendha arpudham naan solvadhu
yaedhellaam sollaamale thallvadhu
bandham aliththidum paanginaiyo
paasaththil namai pinni vaippadhaiyo
kandhanaay vaelodu ninradhaiyo
ganapadhiyaay poojai yaetradhaiyo
andhamum aadhiyum illaadhaanaay
agginiyil uru kondadhaiyo
chandhiranaay mugam kaattiyadho
shankaranaay kandam karuththadhuvo
padhanjalikkaay nadam aadiyavan
chidhambara ragasiyam kaattiyadho
aiyappanaay ezhundharuliyadho - en
aiyaiyalaay nadam aadiyadho
vaiyam alandha vaamananaay - than
vaan alakkum padham kaattiyadho
எந்தெந்த அற்புதம் நான் சொல்வது
ஏதெல்லாம் சொல்லாமலே தள்வது
பந்தம் அளித்திடும் பாங்கினையோ
பாசத்தில் நமைப் பின்னி வைப்பதையோ
கந்தனாய் வேலொடு நின்றதையோ
கணபதியாய் பூஜை ஏற்றதையோ
அந்தமும் ஆதியும் இல்லாதானாய்
அக்கினியில் உரு கொண்டதையோ
சந்திரனாய் முகம் காட்டியதோ
சங்கரனாய் கண்டம் கறுத்ததுவோ
பதஞ்சலிக்காய் நடம் ஆடியவன்
சிதம்பர ரகசியம் காட்டியதோ
ஐயப்பனாய் எழுந்தருளியதோ - என்
ஐயையளாய் நடம் ஆடியதோ
வையம் அளந்த வாமனனாய் - தன்
வான் அளக்கும் பதம் காட்டியதோ
நெற்றியில் கண் காட்டித் தந்ததுவோ
நீல ஜோதி தன்னில் வைத்ததுவோ
சுற்றியே வாகனம் சூழ்ந்திருக்க
சிவனாக உமையோடு நின்றதுவோ
மருத்துவர் கைவிட்ட உயிர்களெல்லாம் - சிறு
மணித்துளியில் காப்பாற்றியதோ
தனித்துவம் கொண்ட இறையவனாய்
தரணியின் ஆளுகை ஏற்றதுவோ
Komentar