Enakkul irukkum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 4 min read
Updated: Aug 13, 2020
Audio:
Enakkul irukkum uyarndha vasthu
needhaan allava
ulagengum irukkum uyarndha vasthuvum
neeye allava
enakkul unnai iruththi vaippadhu
gnaanam allava - [baba]
orunaal neeye naanaay naane neeyaay aavom allava
onraay aavom allava onraay aavom allava
vidhaiyaay vizhundhadhu payiraay ezhundhadhu
neeraal allava - muzhu
viragaay irundhadhu saambal aanadhum
neruppaal allava
uyirudan iruppadhum udalai sumappadhum
kaatraal allava - engal
neerum neruppum kaatrum Baba neeye allava
enrum neeye allava enrum neeye allava
aindhu karam enil aindhu seyal ena
aagum allava - avai
aakkal kaaththal odukkal maraiththal
arulal allava
nandhi magan enum gnaana kozhundhum
neeye allava - engal
nalvinai theevinai kanakkugal undhan
kaiyil allava
Baba kaiyil allava undhan kaiyil allava
andathil ulladhu pindathil ulladhu
arivom mannava - indha
agilathai kaakkum padhaviyil un per
Hari om allava
inbamum thunbamum nanbargal enbadhai
unarndhen sundhara - innum
enakkum unakkum idaiveli enbadhu
yeno Shankara
innum yeno Shankara idaiveli yeno Shankara
எனக்குள்ளிருக்கும் உயர்ந்த வஸ்து நீதானல்லவா
உலகெங்கும் இருக்கும் உயர்ந்த வஸ்துவும் நீயே அல்லவா
எனக்குள் உன்னை இருத்தி வைப்பது ஞானம் அல்லவா - [பாபா]
ஒருநாள் நீயே நானாய் நானே நீயாய் ஆவோம் அல்லவா
ஒன்றாய் ஆவோம் அல்லவா ஒன்றாய் ஆவோம் அல்லவா
விதையாய் விழுந்தது பயிராய் எழுந்தது நீரால் அல்லவா - முழு
விறகாய் இருந்தது சாம்பல் ஆனதும் நெருப்பால் அல்லவா
உயிருடன் இருப்பதும் உடலை சுமப்பதும் காற்றால் அல்லவா - எங்கள்
நீரும் நெருப்பும் காற்றும் பாபா நீயே அல்லவா
என்றும் நீயே அல்லவா என்றும் நீயே அல்லவா
ஐந்து கரம் எனில் ஐந்து செயல் என ஆகும் அல்லவா - அவை
ஆக்கல் காத்தல் ஒடுக்கல் மறைத்தல் அருளல் அல்லவா
நந்தி மகன் எனும் ஞானக் கொழுந்தும் நீயே அல்லவா - எங்கள்
நல்வினை தீவினை கணக்குகள் உந்தன் கையில் அல்லவா
பாபா கையில் அல்லவா உந்தன் கையில் அல்லவா
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது அறிவோம் மன்னவா - இந்த
அகிலத்தை காக்கும் பதவியில் உன் பேர் ஹரி ஓம் அல்லவா
இன்பமும் துன்பமும் நண்பர்கள் என்பதை உணர்ந்தேன் சுந்தரா - இன்னும்
எனக்கும் உனக்கும் இடைவெளி என்பது ஏனோ சங்கரா
இன்னும் ஏனோ சங்கரா இடைவெளி ஏனோ சங்கரா
Meaning
எனக்குள்ளிருக்கும் உயர்ந்த வஸ்து நீதானல்லவா (Enakkul irukkum uyarndha vasthu needhaan allava) You are the supreme object within me,isn’t it உலகெங்கும் இருக்கும் உயர்ந்த வஸ்துவும் நீயே அல்லவா (ulagengum irukkum uyarndha vasthuvum neeye allava) You are the only supreme object present in the whole world , isn’t it எனக்குள் உன்னை இருத்தி வைப்பது ஞானம் அல்லவா - [பாபா] (enakkul unnai iruththi vaippadhu gnaanam allava - [baba]) Wisdom is the one that fixes me firmly to you, isn’t it? ஒருநாள் நீயே நானாய் நானே நீயாய் ஆவோம் அல்லவா (orunaal neeye naanaay naane neeyaay aavom allava) One day,You will become me and I will become you, isn’t it ஒன்றாய் ஆவோம் அல்லவா ஒன்றாய் ஆவோம் அல்லவா (onraay aavom allava onraay aavom allava) We will become One, won’t we Summary 1: You are the Supreme object present in me and the whole universe.To fix You firmly in my mind and meditate till I realize that we are One is highest wisdom, isn’t it Baba? விதையாய் விழுந்தது பயிராய் எழுந்தது நீரால் அல்லவா - முழு (vidhaiyaay vizhundhadhu payiraay ezhundhadhu neeraal allava - muzhu) The fallen seed rose as a plant due to water, isn’t it - whole விறகாய் இருந்தது சாம்பல் ஆனதும் நெருப்பால் அல்லவா (viragaay irundhadhu saambal aanadhum neruppaal allava) Firewood became ashes due to fire, isn’t it உயிருடன் இருப்பதும் உடலை சுமப்பதும் காற்றால் அல்லவா - எங்கள் (uyirudan iruppadhum udalai sumappadhum kaatraal allava - engal) To be alive and bear this body is due to air, isn’t it நீரும் நெருப்பும் காற்றும் பாபா நீயே அல்லவா (neerum neruppum kaatrum Baba neeye allava) Water,fire and air are all You Baba, aren’t You என்றும் நீயே அல்லவா என்றும் நீயே அல்லவா (enrum neeye allava enrum neeye allava) Forever You only ,aren’t You Summary 2: As how due to water,a seed grows, due to fire a log burns,due to air the body is alive, I understand that it’s all You.You are the five elements and that You are Omnipresent. ஐந்து கரம் எனில் ஐந்து செயல் என ஆகும் அல்லவா - அவை (aindhu karam enil aindhu seyal ena aagum allava - avai) Five hands means five actions, doesn’t it - they are ஆக்கல் காத்தல் ஒடுக்கல் மறைத்தல் அருளல் அல்லவா (aakkal kaaththal odukkal maraiththal arulal allava) Creation, Protection,Destruction, concealment and Grace, aren’t they நந்தி மகன் எனும் ஞானக் கொழுந்தும் நீயே அல்லவா - எங்கள் (nandhi magan enum gnaana kozhundhum neeye allava - engal) You are Lord Ganesha , Nandi’s (Shiva’s)son,the epitome of wisdom, aren’t You - our நல்வினை தீவினை கணக்குகள் உந்தன் கையில் அல்லவா (nalvinai theevinai kanakkugal undhan kaiyil allava) accounts of good and bad deeds are in Your hands, isn’t it பாபா கையில் அல்லவா உந்தன் கையில் அல்லவா (Baba kaiyil allava undhan kaiyil allava) Baba it’s in Your hands isn’t it Summary 3: You are the Supreme Being, Lord Ganesha,epitome of Knowledge who does the five actions.Baba , our accounts of past karmas and good and bad deeds are in Your hands. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது அறிவோம் மன்னவா - இந்த (andathil ulladhu pindathil ulladhu arivom mannava - indha) That which is present in the universe is present within the body, we know O Lord அகிலத்தை காக்கும் பதவியில் உன் பேர் ஹரி ஓம் அல்லவா (agilathai kaakkum padhaviyil un per Hari om allava) In the post of protecting the universe,Your name is Hari Om, isn’t it இன்பமும் துன்பமும் நண்பர்கள் என்பதை உணர்ந்தேன் சுந்தரா - இன்னும் (inbamum thunbamum nanbargal enbadhai unarndhen sundhara - innum) Both pleasure and sorrow are friends together, I realize Sundara - but still எனக்கும் உனக்கும் இடைவெளி என்பது ஏனோ சங்கரா (enakkum unakkum idaiveli enbadhu yeno Shankara) Between You and me,why is a gap there Shankara இன்னும் ஏனோ சங்கரா இடைவெளி ஏனோ சங்கரா (innum yeno Shankara idaiveli yeno Shankara) Still why Shankara , there’s a gap Shankara Summary 4: I realize that the universe and the body are made of the same elements .pleasure and pain are the two sides of the same coin called life. You are the Protector Hari, Baba! Even after realizing these,why is there a gap between us, why am I not united with You, O Lord Sivashankar. This song explains that Sivashankar Baba is Omnipresent, Omnipotent and Omniscient and that,if we realize this,we can be one with Him.
Comments