Enakkonrum theriyaadhu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 7 min read
Updated: Aug 6, 2020
Audio:
Enakkonrum theriyaadhu Baba - un
ezhilanri nizhalanri isai meettum vizhiyanri
manakkannil vilaiyaadum naadhaa - naangal
magizhvodu dhinam vaazha nal vaazhthu nee thaa
azhagaana aalayathul idam pidikkavum - nee
nazhuvaamal padam pidikka adam pidikkavum
aanmeega therizhukka vadam pidikkavum - un
adiyotri udan vandhu thadam padhikkavum
vaasikkul vasikindra mudhalali nee
maanudham uyartha vanda thozhilali nee
nesikka therindavarkku nijadeivam nee
ninappathellam nadhathum aruljyothi nee
poojikka theriyaadha naan poojiyam - enakkul
pugundhu nadathukinrai. samrajiyam
yedhukkum udhavaadhen poorvaasramam - idharkul
eppadi amaithhai un simmhasanam
porpadham thanil ennai oppadaithen - indha
kuppaiyai unnarulaal seppanitten
karpaga tharuvaay nee enai maatru - en
kangalil aanmeega vilakketru
puravazhipattai nee madai maattra vaa - en
agavazhi paattukku sruthi kootta vaa
parimudhal aagamal vidhi maattra vaa - nam
paramparai gnaanatthai nilainaatta vaa
maanikka ponveenai un kaivasam
maaperum vallal nee en kaivasam
gnaanathin olivellam sivashankaram - indha
gnaalamellaam unadhu manimandapam
ezhuchiyin adaiyalam mayilvaahanam - gnaana
puratchiyin adaiyalam mounaswaram
mudhirchiyin adaiyalam karunakaram - eesan
magizhchiyin adaiyalam samratchanam
tholaindhadhu unnaal en dhurbhakkiyam
vilaiyndhadhu en vaazhvil sowbhaghiyam
suzhaludhu sankarathin sangeerthanam
thodarudhu aanmeega aalinganam
aaraya nee enna poi vedama? - illai
andradam maarukindra vigyaanamaa?
aaraya munaivadhellam agnaaname - unnai
agathul pidithu vaithal meignaaname
sowlabyam unnodu sadhiraduthu - un
saanithyam adharkulle izhaiyoduthu
vaathsalyam uruveduthu mozhi pesudhu - un
vaakkinil deiveega manam veesudhu
poorana brahmmatthai yedai podave - indha
podi podi binnangal yedaikkarkalo
yedaikkarkal ellaame kadaikkarkale - unnai
adaiyum vazhithadathil thandai karkale
Imayathai yedaipoda vendum endraal - adharkku
inaiyaana yedaikkallai yaar seivadhu ?
Imaikkamal samaidhirukka iyalaadhavan - indha
inaiyattra paramporulai yedaipaarpadho ?
Imayamalai melamarndha imayaa malai - nee
irukkum nilai yevarkkum amaiyaa nilai
samayangal kadanthu nirkum karunaamalai - indha
sankaram kaimaaru karudhaa malai
unakkonrum theriyaadhu Baba - thondar
ulam ennum nilamanri nalam nalgum thavamanri
unakkondrum thriyaadhu Baba
எனக்கொன்றும் தெரியாது பாபா - உன்
எழிலன்றி நிழலன்றி இசை மீட்டும் விழியன்றி
மனக்கண்ணில் விளையாடும் நாதா - நாங்கள்
மகிழ்வோடு தினம் வாழ நல் வாழ்த்து நீ தா
அழகான ஆலயத்துள் இடம் பிடிக்கவும் - நீ
நழுவாமல் படம் பிடிக்க அடம் பிடிக்கவும்
ஆன்மீக தேரிழுக்க வடம் பிடிக்கவும் - உன்
அடியொற்றி உடன் வந்து தடம் பதிக்கவும்
வாசிக்குள் வசிக்கின்ற முதலாளி
நீ மானுடம் உயர்த்த வந்த தொழிலாளி
நீ நேசிக்க தெரிந்தர்வர்க்கு நிஜதெய்வம்
நீ நினைப்பதெல்லாம் நடத்தும் அருள்ஜோதி நீ
பூஜிக்கத் தெரியாத நான் பூஜியம் - எனக்குள்
புகுந்து நடத்துகின்றாய் சாம்ராஜியம்
ஏதுக்கும் உதவாதென் பூர்வாஸ்ரமம் - இதற்குள்
எப்படி அமைத்தாய் உன் சிம்மாசனம்
பொற்பதம் தனில் என்னை ஒப்படைத்தேன் - இந்த
குப்பையை உன்னருளால் செப்பனிட்டேன்
கற்பகத் தருவாய் நீ எனை மாற்று - என்
கண்களில் ஆன்மீக விளக்கேற்று
புறவழிபாட்டை நீ மடை மாற்ற வா - என்
அகவழி பாட்டுக்கு சுதி கூட்ட வா
பறிமுதல் ஆகாமல் விதி மாற்ற வா - நம்
பரம்பரை ஞானத்தை நிலைநாட்ட வா
மாணிக்கப் பொன்வீணை உன் கைவசம்
மாபெரும் வள்ளல் நீ என் கைவசம்
ஞானத்தின் ஒளிவெள்ளம் சிவசங்கரம் - இந்த
ஞாலமெல்லாம் உனது மணிமண்டபம்
எழுச்சியின் அடையாளம் மயில்வாகனம் - ஞானப்
புரட்சியின் அடையாளம் மௌனஸ்வரம்
முதிர்ச்சியின் அடையாளம் கருணாகரம் - ஈசன்
மகிழ்ச்சியின் அடையாளம் சம்ரட்சணம்
தொலைந்தது உன்னால் என் துர்பாக்கியம்
விளைந்தது என்வாழ்வில் சௌபாக்கியம்
சுழலுது சங்கரத்தின் சங்கீர்த்தனம்
தொடருது ஆன்மீக ஆலிங்கனம்
ஆராய நீ என்ன பொய் வேடமா ? - இல்லை
அன்றாடம் மாறுகின்ற விஞ்ஞானமா ?
ஆராய முனைவதெல்லாம் அஞ்ஞானமே - உன்னை
அகத்துள் பிடித்து வைத்தல் மெய்ஞ்ஞானமே
ஸௌலப்யம் உன்னோடு சதிராடுது - உன்
ஸாநித்யம் அதற்குள்ளே இழையோடுது
வாத்ஸல்யம் உருவெடுத்து மொழி பேசுது - உன்
வாக்கினில் தெய்வீக மணம் வீசுது
பூரண ப்ரம்மத்தை எடைபோடவே - இந்தப்
பொடிப் பொடி பின்னங்கள் எடைக்கற்களோ
எடைக்கற்கள் எல்லாமே கடைக்கற்களே - உன்னை
அடையும் வழித்தடத்தில் தடைக்கற்களே
இமயத்தை எடைபோட வேண்டும் என்றால் - அதற்கு
இணையான எடைக்கல்லை யார் செய்வது ?
இமைக்காமல் சமைந்திருக்க இயலாதவன் - இந்த
இணையற்ற பரம்பொருளை எடைபார்ப்பதோ?
இமயமலை மேலமர்ந்த இமையா மலை - நீ
இருக்கும் நிலை எவர்க்கும் அமையா நிலை
சமயங்கள் கடந்துநிற்கும் கருணாமலை - இந்தச்
சங்கரம் கைம்மாறு கருதா மலை
உனக்கொன்றும் தெரியாது பாபா - தொண்டர்
உளம் என்னும் நிலமன்றி நலம் நல்கும் தவமன்றி
உனக்கொன்றும் தெரியாது பாபா
Meaning
எனக்கொன்றும் தெரியாது பாபா - உன்
(Enakkonrum theriyaadhu Baba - un)
I don’t know anything else Baba - (except)Your
எழிலன்றி நிழலன்றி இசை மீட்டும் விழியன்றி
(ezhilanri nizhalanri isai meettum vizhiyanri)
Beautiful appearance,shade of grace and soulful musical eyes
மனக்கண்ணில் விளையாடும் நாதா - நாங்கள்
(manakkannil vilaiyaadum naadhaa - naangal)
In the eyes of my mind, You are playing O Master ! - For us
மகிழ்வோடு தினம் வாழ நல் வாழ்த்து நீ தா
(magizhvodu dhinam vaazha nal vaazhthu nee thaa)
to live happily every day, please give Your blessings
Summary 1
I don’t know anything except You,O Baba. In the eyes of my mind, You are playing O Master ! Please give us Your blessings for us to live happily.
அழகான ஆலயத்துள் இடம் பிடிக்கவும் - நீ
(azhagaana aalayathul idam pidikkavum - nee)
To enshrine you in the beautiful temple of my heart- You
நழுவாமல் படம் பிடிக்க அடம் பிடிக்கவும்
(nazhuvaamal padam pidikka adam pidikkavum)
to capture you firmly without slipping away
ஆன்மீக தேரிழுக்க வடம் பிடிக்கவும் - உன்
(aanmeega therizhukka vadam pidikkavum - un)
To hold and pull the reins of the spiritual chariot - in Your
அடியொற்றி உடன் வந்து தடம் பதிக்கவும்
(adiyotri udan vandhu thadam padhikkavum)
follow the steps and to make an imprint
Summary 2
To enshirine you in the beautiful temple of my heart, to capture you firmly without you slipping away.
வாசிக்குள் வசிக்கின்ற முதலாளி நீ
(vaasikkul vasikindra mudhalali nee)
You are the master who residing in my breath
மானுடம் உயர்த்த வந்த தொழிலாளி நீ
(maanudham uyartha vanda thozhilali nee)
You are the worker who came to uplift the humanity
நேசிக்க தெரிந்தர்வர்க்கு நிஜதெய்வம் நீ
(nesikka therindavarkku nijadeivam nee)
For those who know to love, You are the real God
நினைப்பதெல்லாம் நடத்தும் அருள்ஜோதி நீ
(ninappathellam nadhathum aruljyothi nee)
You are the luminous grace that accomplishes everything
Summary 3:
You are the master in breath, You are the labour who came to uplift the humanity, You are the GOD for those who know to love truly, You are the graceful light who manifests everything that we think.
பூஜிக்கத் தெரியாத நான் பூஜியம் - எனக்குள்
(poojikka theriyaadha naan poojiyam - enakkul)
As I don’t know how to worship, I’m nothing - within me
புகுந்து நடத்துகின்றாய் சாம்ராஜியம்
(pugundhu nadathukinrai. samrajiyam)
You entered and rule a kingdom
ஏதுக்கும் உதவாதென் பூர்வாஸ்ரமம் - இதற்குள்
(yedhukkum udhavaadhen poorvaasramam - idharkul)
My previous life is as useless as my mind - in it
எப்படி அமைத்தாய் உன் சிம்மாசனம்
(eppadi amaithhai un simmhasanam)
how come you created Your throne
Summary 4:
I don’t know to worship You, hence I’m nothing.But You entered my heart and rule Your kingdom.Though I’m useless in all ways, You are seated in a throne within me.
பொற்பதம் தனில் என்னை ஒப்படைத்தேன் - இந்த
(porpadham thanil ennai oppadaithen - indha)
I submit myself at Your golden feet - this
குப்பையை உன்னருளால் செப்பனிட்டேன்
(kuppaiyai unnarulaal seppanitten)
I reformed my Filthy mind and body by Your Grace
கற்பகத் தருவாய் நீ எனை மாற்று - என்
(karpaga tharuvaay nee enai maatru - en)
Transform me into a wishful tree - in my
கண்களில் ஆன்மீக விளக்கேற்று
(kangalil aanmeega vilakketru)
light my eyes with the lamp of spirituality
Summary 5:
I surrender to Your golden feet, by Your Grace, I reformed my filthy existence. Please transform me into the wishful tree( kalpataru) and enlighten me in spirituality.
புறவழிபாட்டை நீ மடை மாற்ற வா - என்
(puravazhipattai nee madai maattra vaa - en)
Come and change the way I do the outward worship - my
அகவழி பாட்டுக்கு சுதி கூட்ட வா
(agavazhi paattukku sruthi kootta vaa)
Be my tune, to increase my inner(musical) worship
பறிமுதல் ஆகாமல் விதி மாற்ற வா - நம்
(parimudhal aagamal vidhi maattra vaa - nam)
Without confiscating,come to change my fate - our
பரம்பரை ஞானத்தை நிலைநாட்ட வா
(paramparai gnaanatthai nilainaatta vaa)
To establish inherent wisdom, please come
Summary 6:
Please come ,to change my outward worship, Be my tune, to increase my inner(musical) worship. Before I’m plundered by sins, please come to change my fate to be good and establish the inherent knowledge that we are one.
மாணிக்கப் பொன்வீணை உன் கைவசம்
(maanikka ponveenai un kaivasam)
The precious ruby veena is held by You( Shiva)
மாபெரும் வள்ளல் நீ என் கைவசம்
(maaperum vallal nee en kaivasam)
You, the Great benevolent One are in my hold
ஞானத்தின் ஒளிவெள்ளம் சிவசங்கரம் - இந்த
(gnaanathin olivellam sivashankaram - indha)
The great luminous form of Wisdom is Sivashankar - this
ஞாலமெல்லாம் உனது மணிமண்டபம்
(gnaalamellaam unadhu manimandapam)
Whole universe is Your bejeweled hall
Summary 7:
You are Shiva, who holds the ruby veena and I’m happy to have captured this Benevolent One within me.The luminous form of wisdom is Sivashankar Baba and the whole universe is His bejeweled assembly.
எழுச்சியின் அடையாளம் மயில்வாகனம் - ஞானப்
(ezhuchiyin adaiyalam mayilvaahanam - gnaana)
Symbol of awakening is peacock mount - wisdom’s
புரட்சியின் அடையாளம் மௌனஸ்வரம்
(puratchiyin adaiyalam mounaswaram)
revolutionary (evolutionary) symbol is silence
முதிர்ச்சியின் அடையாளம் கருணாகரம் - ஈசன்
(mudhirchiyin adaiyalam karunakaram - eesan)
Maturity’s sign is being compassionate - Lord Shiva’s
மகிழ்ச்சியின் அடையாளம் சம்ரட்சணம்
(magizhchiyin adaiyalam samratchanam)
Sign of happiness is samratchana organization (total protection)
Summary 8:
The sign of awakening is peacock mount of Muruga, the symbol of spiritual evolution is silence and the sign of spiritual wisdom is compassion. But the sign of Lord Shiva’s Happiness portrays Samratchana organization that means total protection.
தொலைந்தது உன்னால் என் துர்பாக்கியம்
(tholaindhadhu unnaal en dhurbhakkiyam)
Because of You, my ill fortune vanished
விளைந்தது என்வாழ்வில் சௌபாக்கியம்
(vilaiyndhadhu en vaazhvil sowbhaghiyam)
Good fortune entered in my life
சுழலுது சங்கரத்தின் சங்கீர்த்தனம்
(suzhaludhu sankarathin sangeerthanam)
Sivashankar’s music revolves everywhere
தொடருது ஆன்மீக ஆலிங்கனம்
(thodarudhu aanmeega aalinganam)
spiritual embrace ( upliftment ) continues
Summary 9:
All my ill fortune vanished and good fortune entered my life,when Baba started to play music in my life and continue to uplift me through spiritual embrace.
ஆராய நீ என்ன பொய் வேடமா ? - இல்லை
(aaraya nee enna poi vedama? - illai)
to do research, are You a fraudster - or else
அன்றாடம் மாறுகின்ற விஞ்ஞானமா ?
(andradam maarukindra vigyaanamaa?)
the ever changing science and technology
ஆராய முனைவதெல்லாம் அஞ்ஞானமே - உன்னை
(aaraya munaivadhellam agnaaname - unnai)
to do research on You is just ignorance - You
அகத்துள் பிடித்து வைத்தல் மெய்ஞ்ஞானமே
(agathul pidithu vaithal meignaaname)
to be enshrined within myself is true spiritual knowledge
Summary 10:
Are You a fraudulent swami to do research on,or are You like ever changing technology that needs research? It’s pure ignorance to test you,instead it’s highest spiritual wisdom to enshrine You within.
ஸௌலப்யம் உன்னோடு சதிராடுது - உன்
(sowlabyam unnodu sadhiraduthu - un)
easy attainablity is Your forte - Your
ஸாநித்யம் அதற்குள்ளே இழையோடுது
(saanithyam adharkulle izhaiyoduthu)
Divine Presence is felt within that
வாத்ஸல்யம் உருவெடுத்து மொழி பேசுது - உன்
(vaathsalyam uruveduthu mozhi pesudhu - un)
tender affection has taken this form and speaks - in Your
வாக்கினில் தெய்வீக மணம் வீசுது
(vaakkinil deiveega manam veesudhu)
Speech there’s fragrant Divinity
Summary 11:
You are easily attainable and we can feel divinity all around You. You are compassion incarnate and we can feel the divinity in Your speech.
பூரண ப்ரம்மத்தை எடைபோடவே - இந்தப்
(poorana brahmmatthai yedai podave - indha)
To gauge(measure) this Poornabrahmam(complete avatar) - these
பொடிப் பொடி பின்னங்கள் எடைக்கற்களோ
(podi podi binnangal yedaikkarkalo)
Small bits of fragments are measuring weights ?
எடைக்கற்கள் எல்லாமே கடைக்கற்களே - உன்னை
(yedaikkarkal ellaame kadaikkarkale - unnai)
All these measuring weights are cheap from the market - You
அடையும் வழித்தடத்தில் தடைக்கற்களே
(adaiyum vazhithadathil thandai karkale)
to attain You ,in the path are blocking stones
Summary 12:
You are the complete avatar and how can anyone gauge Your greatness and spiritual heights using small bits of information.Infact these are just like stones that block our path to attain You.
இமயத்தை எடைபோட வேண்டும் என்றால் - அதற்கு
( Imayathai yedaipoda vendum endraal - adharkku)
If you have to gauge the weight of Himalayas - for that
இணையான எடைக்கல்லை யார் செய்வது ?
(inaiyaana yedaikkallai yaar seivadhu ?)
who can make an equal weight measure ?
இமைக்காமல் சமைந்திருக்க இயலாதவன் - இந்த
(Imaikkamal samaidhirukka iyalaadhavan - indha)
One who cannot even sit without blinking - this
இணையற்ற பரம்பொருளை எடைபார்ப்பதோ?
(inaiyattra paramporulai yedaipaarpadho ?)
Unparalleled Supreme Being , can he gauge Him?
Summary 13:
How can you gauge the weight of Himalayas,as its impossible to get an equal measuring weight ? Same way with the restless mind,how can anyone gauge or realize the Paramathma
இமயமலை மேலமர்ந்த இமையா மலை - நீ
(Imayamalai melamarndha imayaa malai - nee)
Atop Himalayas You are seated without blinking(in meditation) - Your
இருக்கும் நிலை எவர்க்கும் அமையா நிலை
( irukkum nilai yevarkkum amaiyaa nilai )
Divine state is unattainable by anyone
சமயங்கள் கடந்துநிற்கும் கருணாமலை - இந்தச்
(samayangal kadanthu nirkum karunaamalai - indha)
You are a mountain of compassion that is beyond religions - this
சங்கரம் கைம்மாறு கருதா மலை
(sankaram kaimaaru karudhaa malai)
Shankaran is a spiritual mountain who doesn’t expect anything
Summary 14:
Sivashankar Baba is Lord Shiva,who is seated unmoving in meditation atop the Himalayas. Your Supreme Divine State is unattainable by anyone. You are a mountain of Love and Compassion, beyond religions who doesn’t expect anything from anyone.
உனக்கொன்றும் தெரியாது பாபா - தொண்டர்
(unakkonrum theriyaadhu Baba - thondar)
You don’t know anything Baba - (except) devotees
உளம் என்னும் நிலமன்றி நலம் நல்கும் தவமன்றி
(ulam ennum nilamanri nalam nalgum thavamanri)
Besides creating a place in my heart and bestowing goodness which is your penance
உனக்கொன்றும் தெரியாது பாபா
(unakkondrum thriyaadhu Baba)
You don’t know anything else Baba
Summary 15:
O Baba, You don’t know anything else except to reside in devotee's heart and grant your penance as Grace for the well-being of Your devotees.
This song depicts a devotee’s love for Sivashankar Baba and explains the nature of Baba’s Grace.
This beautiful rendering is by poet Illandevan who summarizes Baba’s supreme spiritual heights as God of Gods and that instead of wasting time uselessly in researching Him, one has to enshrine Him within to attain spiritual upliftment.
Comments