Chithambaram saervaarum
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Chithambaram saervaarum thiruthondil aazhvaarum
padham pera varum kshethram samratchanam - engal
paattudai thalaivan paer Sivashankaram
thiruppathi malai maelum Sri Rangan thuyil maelum
sirappudan arasaalum sri vaishnavam - adhudhaan
sirippudan namai vaazhththum sivashankaram
naamam ittu kondaalum naamam thannai sonnaalum
kshemam thara oadi varum thisai engilum - antha
thiru naamam jegamaallum Sivashankaram
dhinam kandharanuboothi thevittaamal suvaippavarkkull
manakkuthu thavayoga sivashanmugam - atharku
matroru peyarthaane Sivashankaram
kaliyuga thuyar neekki kanavilum nalam kaatti
olikkuthu oankaara sudar manthiram-adhudhaan
nammudan paesuginra Sivashankaram
kaasi visalatchi kaanjiyil kamatchi
mathuraiyil meenatchi arull sangamam - avargal
maatrudai anintha nilaiyil Sivashankaram
poorana parabrammam pugazh tharum yugadharmam
naaranan avathaaram Sivashankaram - idhai nee
gnaabagam vaiththukkoll nalam oangidum
சிதம்பரம் சேர்வாரும் திருத்தொண்டில் ஆழ்வாரும்
பதம் பெற வரும் க்ஷேத்ரம் சம்ரட்சணம்-எங்கள்
பாட்டுடைத் தலைவன் பேர் சிவசங்கரம்
திருப்பதி மலைமேலும் ஸ்ரீரங்கன் துயில்மேலும்
சிறப்புடன் அரசாளும் ஸ்ரீ வைஷ்ணவம் - அதுதான்
சிரிப்புடன் நமை வாழ்த்தும் சிவசங்கரம்
நாமம் இட்டு கொண்டாலும் நாமம் தன்னை சொன்னாலும்
க்ஷேமம் தர ஓடி வரும் திசையெங்கிலும் - அந்த
திருநாமம் ஜெகமாளும் சிவசங்கரம்
தினம் கந்தரனுபூதி தெவிட்டாமல் சுவைப்பவர்க்குள்
மணக்குது தவயோக சிவசண்முகம் - அதற்கு
மற்றொரு பெயர்தானே சிவசங்கரம்
கலியுக துயர் நீக்கி கனவிலும் நலம் காட்டி
ஒலிக்குது ஓங்கார சுடர்மந்திரம் - அதுதான்
நம்முடன் பேசுகின்ற சிவசங்கரம்
காசி விசாலாட்சி காஞ்சியில் காமாட்சி
மதுரையில் மீனாட்சி அருள் சங்கமம் - அவர்கள்
மாற்றுடை அணிந்த நிலையில் சிவசங்கரம்
பூரண பரப்ரம்மம் புகழ் தரும் யுகதர்மம்
நாரணன் அவதாரம் சிவசங்கரம் - இதை நீ
ஞாபகம் வைத்துக்கொள் நலம் ஓங்கிடும்
Comments