Chinna kuzhandhaiye
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Chinna kuzhandhaiye Shankarame
chiththira medhaiyil poocharame
annai naan seidha perum thavame
aadhi shankarame thaalelo
chinna padhangalai naan varudi
sindhai kulirave paarththiruppen
sanna kuralile naan paada
Shankara kangal urangaayo
needhi nasiththu varuvadhile
nimmadhi inri thaviththaayo
jothi roopan nee kann thirandhaal
suththa san maargam thazhaikkaadho
kaliyuga kedugal kandu kandu
kangal sivakka azhudhaayo
kaantha malai vaasan nee ninaindhaal
karpaga cholai valaraadho
aaryaambigaiyaaga naan irundhen - unai
alli anaiththu magizhndhirundhen
thoorigaiyaal unnai theettivaiththen - en
thunbathilum adhai paarthirundhen
thaayin manadhu thaviththadhenru
thangame nee meendum vandhaayo
aaya kadamai naduvinile
annai madiyil urangaayo
eththanai kanavugal niththa niththam
yezhai manadhil sumandhirundhen
aththanaiyum inru kaangavenre
anbu magane udhiththaayo
maali ittu unnai paarththu vitten
manakkurai yaavume theerndhu vitten
solai ulaavum ilam kiliye - en
selai thalaippil urangaayo
சின்னக் குழந்தையே சங்கரமே
சித்திர மெத்தையில் பூச்சரமே
அன்னை நான் செய்த பெருந்தவமே
ஆதி சங்கரமே தாலேலோ
சின்னப் பதங்களை நான் வருடி
சிந்தை குளிரவே பார்த்திருப்பேன்
சன்னக் குரலிலே நான் பாட
சங்கரா கண்கள் உறங்காயோ
நீதி நசித்து வருவதிலே
நிம்மதியின்றி தவித்தாயோ
ஜோதி ரூபன் நீ கண் திறந்தால்
சுத்த சன்மார்க்கம் தழைக்காதோ
கலியுகக் கேடுகள் கண்டு கண்டு
கண்கள் சிவக்க அழுதாயோ
காந்த மலை வாசன் நீ நினைந்தால்
கற்பகச் சோலை வளராதோ
ஆர்யாம்பிகையாக நானிருந்தேன் - உனை
அள்ளி அணைத்து மகிழ்ந்திருந்தேன்
தூரிகையால் உன்னைத் தீட்டி வைத்தேன் - என்
துன்பத்திலும் அதைப் பார்த்திருந்தேன்
தாயின் மனது தவித்ததென்று
தங்கமே நீ மீண்டும் வந்தாயோ
ஆய கடமை நடுவினிலே
அன்னை மடியில் உறங்காயோ
எத்தனை கனவுகள் நித்த நித்தம்
ஏழை மனதில் சுமந்திருந்தேன்
அத்தனையும் இன்று காண்கவென்றே
அன்பு மகனே உதித்தாயோ
மாலையிட்டு உன்னைப் பார்த்து விட்டேன்
மனக்குறை யாவுமே தீர்ந்து விட்டேன்
சோலை உலாவும் இளங்கிளியே - என்
சேலைத் தலைப்பில் உறங்காயோ
Comments