top of page

Baba enroru

  • SamratchanaLyrics
  • Feb 19, 2019
  • 6 min read

Updated: Jul 2, 2020

Audio:


Baba enroru gnaana chooriyan

pooththadhu mann meedhu - adhan

paridhi karangal pattadhum peroli

paravudhu vinn meedhu

kadhir pooththadhu mann meedhu

oli paravudhu vinn meedhu


tharaiyil sooriyan vandhadhanaale

ellaam thanga mayam - andha

thaththuva viththagan sollum seyalum

adadaa anbu mayam

ellaam thanga mayam - avan

adadaa anbu mayam


thamarai pookkal aayiram pooththadhu

pole avan sirippu - andha

shantha kumaaran paarvaiyile dhaan

eththanai thaga thagappu

thaamarai avan sirippu - adhil

eththanai thaga thagappu


aalangaayam ennum ooril

aanmeegam avadhaaram - naam

vaazhum kaalam sankaram vandhadhu

vaanavar thandha varam

aanmeegam avadhaaram - adhu

vaanavar thandha varam


dheiva thirumagan peyarai sonnaal

eththanai santhosham - andha

dheva kumaaran thiruvilaiyaadal

eththanai ullaasam

eththanai santhosham - ada

eththanai ullaasam


ella noyukm avanai kandaal

nillaadhodiyadhu - avan

irukkum idaththil nanmaiyum theemaiyum

naattiyam aadiyadhu

noy nillaadhodiyadhu - nanmai

naattiyam aadiyadhu


vaanagam avanadhu vaasalile naan

varavaa engiradhu - oru

vaarththai sonnaal tharagai midhiyadi

tharavaa engiradhu

vaan varavaa engiradhu

thaaragai tharavaa engiradhu


maanudam inimel moovulagaalum

magimai varugiradhu - andha

mannadi vendhan maayaa jaalam

yaarukku purigiradhu

magimai varugiradhu - aadhu

yaarukku purigiradhu


narththana ganapathi pole oru naal

naattiyam aadugiraan - andha

nataraasan pol oorththuva thaandavam

nammun nigazhththugiraan

naattiyam aadugiraan - adhai

nammun nigazhththugiraan


netrum inrum naalaiyum enrum

avanadhu raajaangam - avanai

ninaippavar vaazhvil ellaa valamum

nichchayam ninrongum

avanadhu raajaangam - adhu

nichchayam ninrongum


mannadi maayan thannadi potru

maayaigal vilagi vidum - ini

unnadi potri maalaigal sootta

oore thirandu varum

maayaigal vilagi vidum - thozha

oore thirandu varum


shakthi kumaaran dhevan paadal

saththiya geethamadi - avan

Shankara dhesigan patri sonnavai

niththiya vedhamadi

saththiya geethamadi - adhu

niththiya vedhamadi



பாபா என்றொரு ஞானச் சூரியன் பூத்தது மண் மீது - அதன்

பரிதிக் கரங்கள் பட்டதும் பேரொளி பரவுது விண்மீது

கதிர் பூத்தது மண்மீது - ஒளி பரவுது விண்மீது


தரையில் சூரியன் வந்ததனாலே எல்லாம் தங்கமயம் - அந்த

தத்துவ வித்தகன் சொல்லும் செயலும் அடடா அன்பு மயம்

எல்லாம் தங்க மயம் - அவன் அடடா அன்பு மயம்


தாமரைப் பூக்கள் ஆயிரம் பூத்தது போலே அவன் சிரிப்பு - அந்த

சாந்தகுமாரன் பார்வையிலேதான் எத்தனை தகதகப்பு

தாமரை அவன் சிரிப்பு - அதில் எத்தனை தகதகப்பு


ஆலங்காயம் என்னும் ஊரில் ஆன்மீகம் அவதாரம் - நாம்

வாழும் காலம் சங்கரம் வந்தது வானவர் தந்த வரம்

ஆன்மிகம் அவதாரம் - அது வானவர் தந்த வரம்


தெய்வத் திருமகன் பெயரைச் சொன்னால் எத்தனை சந்தோஷம் - அந்த

தேவகுமாரன் திருவிளையாடல் எத்தனை உல்லாசம்

எத்தனை சந்தோஷம் - அட எத்தனை உல்லாசம்


எல்லா நோயும் அவனைக் கண்டால் நில்லாதோடியது - அவன்

இருக்கும் இடத்தில் நன்மையும் தீமையும் நாட்டியம் ஆடியது

நோய் நில்லாதோடியது - நன்மை நாட்டியம் ஆடியது


வானகம் அவனது வாசலிலே நான் வரவா என்கிறது - ஒரு

வார்த்தை சொன்னால் தாரகை மிதியடி தரவா என்கிறது

வான் வரவா என்கிறது - தாரகை தரவா என்கிறது


மானுடம் இனிமேல் மூவுலகாளும் மகிமை வருகிறது - அந்த

மண்ணடி வேந்தன் மாயா ஜாலம் யாருக்குப் புரிகிறது

மகிமை வருகிறது - அது யாருக்குப் புரிகிறது


நர்த்தன கணபதி போலே ஒரு நாள் நாட்டியம் ஆடுகிறான் - அந்த

நடராசன் போல் ஊர்த்துவ தாண்டவம் நம்முன் நிகழ்த்துகிறான்

நாட்டியம் ஆடுகிறான் - அதை நம்முன் நிகழ்த்துகிறான்


நேற்றும் இன்றும் நாளையும் என்றும் அவனது ராஜாங்கம் - அவனை

நினைப்பவர் வாழ்வில் எல்லா வளமும் நிச்சயம் நின்றோங்கும்

அவனது ராஜாங்கம் - அது நிச்சயம் நின்றோங்கும்


மண்ணடி மாயன் தன்னடி போற்று மாயைகள் விலகி விடும் - இனி

உன்னடி போற்றி மாலைகள் சூட்ட ஊரே திரண்டு வரும்

மாயைகள் விலகி விடும் - தொழ ஊரே திரண்டு வரும்


சக்தி குமாரன் தேவன் பாடல் சத்திய கீதமடி - அவன்

சங்கர தேசிகன் பற்றிச் சொன்னவை நித்திய வேதமடி

சத்திய கீதமடி - அது நித்திய வேதமடி


Meaning

Baba enroru Gnaana Chooriyan - Baba the sun of wisdom பாபா என்றொரு ஞானச் சூரியன் பூத்தது மண் மீது - அதன் (Baba enroru gnaana chooriyan pooththadhu mann meedhu - adhan) Baba the sun of wisdom blossomed in this world. பரிதிக் கரங்கள் பட்டதும் பேரொளி பரவுது விண்மீது (paridhi karangal pattadhum peroli paravudhu vinn meedhu) Touch of realm hands brings great light to the sky கதிர் பூத்தது மண்மீது - ஒளி பரவுது விண்மீது (kadhir pooththadhu mann meedhu oli paravudhu vinn meedhu) Rays blossomed in the land and lights spreads in the sky Summary-1 Baba the sun of wisdom blossomed in this world, touch of his realm hands brought great light to the sky. Rays blossomed in the land and light spreads in the sky தரையில் சூரியன் வந்ததனாலே எல்லாம் தங்கமயம் - அந்த (tharaiyil sooriyan vandhadhanaale ellaam thanga mayam - andha) That Sun God descended on land thereby Spreading golden hues everywhere தத்துவ வித்தகன் சொல்லும் செயலும் அடடா அன்பு மயம் (thaththuva viththagan sollum seyalum adadaa anbu mayam) Philosophical master's words and deeds are filled with love எல்லாம் தங்க மயம் - அவன் அடடா அன்பு மயம் (ellaam thanga mayam - avan adadaa anbu mayam) its gold everywhere -wow! He is filled with love Summary-2 Baba-descended on land by spreading golden hues everywhere, his words and deeds are filled with love .Its gold everywhere and he is filled with love . தாமரைப் பூக்கள் ஆயிரம் பூத்தது போலே அவன் சிரிப்பு - அந்த (thamarai pookkal aayiram pooththadhu pole avan sirippu - andha) His laughter is akin to blossoming of thousands of lotus flowers சாந்தகுமாரன் பார்வையிலேதான் எத்தனை தகதகப்பு (shantha kumaaran paarvaiyile dhaan eththanai thaga thagappu) How radiant are the looks of his embodiment of peace தாமரை அவன் சிரிப்பு - அதில் எத்தனை தகதகப்பு (thaamarai avan sirippu - adhil eththanai thaga thagappu) Lotus are his laughter with radiant Summary-3 His laughter is akin to blossoming of thousands of lotus flowers and his radiant looks are embodiment of peace. Lotus are his laughter and radiant. ஆலங்காயம் என்னும் ஊரில் ஆன்மீகம் அவதாரம் - நாம் (aalangaayam ennum ooril aanmeegam avadhaaram - naam) The spiritual incarnation happened in the place known as Aalangaayam வாழும் காலம் சங்கரம் வந்தது வானவர் தந்த வரம் (vaazhum kaalam sankaram vandhadhu vaanavar thandha varam) The generation we live with shankaram is the boon from supreme ஆன்மிகம் அவதாரம் - அது வானவர் தந்த வரம் (aanmeegam avadhaaram - adhu vaanavar thandha varam) That spiritual incarnation -is boon from the supreme Summary-4 The spiritual incarnation happened in Aalangaayam and the generation we live with him is the boon from supreme The spiritual incarnation is the boon from supreme. தெய்வத் திருமகன் பெயரைச் சொன்னால் எத்தனை சந்தோஷம் - அந்த (dheiva thirumagan peyarai sonnaal eththanai santhosham - andha) Saying God's son's name gives us enormous happiness தேவகுமாரன் திருவிளையாடல் எத்தனை உல்லாசம் (dheva kumaaran thiruvilaiyaadal eththanai ullaasam) That god's son's play gives us enormous joy எத்தனை சந்தோஷம் - அட எத்தனை உல்லாசம் (eththanai santhosham - ada eththanai ullaasam) Huge happiness - wow! enormous joy. Summary-5 Saying God's son's name gives us enormous happiness. His play gives us enormous joy Huge happiness and enormous joy. எல்லா நோயும் அவனைக் கண்டால் நில்லாதோடியது - அவன் (ella noyukm avanai kandaal nillaadhodiyadhu - avan) All diseases disappear at the mere sight of Him இருக்கும் இடத்தில் நன்மையும் தீமையும் நாட்டியம் ஆடியது (irukkum idaththil nanmaiyum theemaiyum naattiyam aadiyadhu) The place where He lives transforms negativity to positivity நோய் நில்லாதோடியது - நன்மை நாட்டியம் ஆடியது (noy nillaadhodiyadhu - nanmai naattiyam aadiyadhu) All diseases cured-and goodness danced/followed effortlessly Summary-6 All diseases disappear at the mere sight of him, the place where he lives transforms negativity to positivity. All diseases cured and goodness followed. வானகம் அவனது வாசலிலே நான் வரவா என்கிறது - ஒரு (vaanagam avanadhu vaasalile naan varavaa engiradhu - oru) Heaven is willing to come to His doorstep வார்த்தை சொன்னால் தாரகை மிதியடி தரவா என்கிறது (vaarththai sonnaal tharagai midhiyadi tharavaa engiradhu) stars are waiting for your one word to spread the red carpet வான் வரவா என்கிறது - தாரகை தரவா என்கிறது (vaan varavaa engiradhu thaaragai tharavaa engiradhu) Sky wanted to come-and stars accepted to give Summary-7 Heaven is waiting to come to his doorstep and the stars are waiting for his one word to spread the Red carpet. sky wanted to come and stars are accepted to give. மானுடம் இனிமேல் மூவுலகாளும் மகிமை வருகிறது - அந்த (maanudam inimel moovulagaalum magimai varugiradhu - andha) Even the common people are honored to rule the universe மண்ணடி வேந்தன் மாயா ஜாலம் யாருக்குப் புரிகிறது (mannadi vendhan maayaa jaalam yaarukku purigiradhu) Who else will understand the magical power of Mannadi's supremo மகிமை வருகிறது - அது யாருக்குப் புரிகிறது (magimai varugiradhu - aadhu yaarukku purigiradhu) Greatness comes-who else understands Summary-8 Even the common people are honored to rule the universe with the magical power of Mannadi's supremo Who else understands his greatness. நர்த்தன கணபதி போலே ஒரு நாள் நாட்டியம் ஆடுகிறான் - அந்த (narththana ganapathi pole oru naal naattiyam aadugiraan - andha) One day He dances like dancing Ganapathy நடராசன் போல் ஊர்த்துவ தாண்டவம் நம்முன் நிகழ்த்துகிறான் (nataraasan pol oorththuva thaandavam nammun nigazhththugiraan) He performs the cosmic dance like Nataraja for us நாட்டியம் ஆடுகிறான் - அதை நம்முன் நிகழ்த்துகிறான் (naattiyam aadugiraan - adhai nammun nigazhththugiraan) He dances in front for us -for us Summary-9 He dances like dancing Ganapathy and performs the cosmic dance like Nataraja for us . He dances in front of us. நேற்றும் இன்றும் நாளையும் என்றும் அவனது ராஜாங்கம் - அவனை (netrum inrum naalaiyum enrum avanadhu raajaangam - avanai) He rules past, present and future always நினைப்பவர் வாழ்வில் எல்லா வளமும் நிச்சயம் நின்றோங்கும் (ninaippavar vaazhvil ellaa valamum nichchayam ninrongum) People who think of him are blessed with all best wishes அவனது ராஜாங்கம் - அது நிச்சயம் நின்றோங்கும் (avanadhu raajaangam - adhu nichchayam ninrongum) His kingdom will last for eternity Summary-10 He rules past, present and future, people who think of him are blessed with all best wishes. His kingdom will last for eternity. மண்ணடி மாயன் தன்னடி போற்று மாயைகள் விலகி விடும் - இனி (mannadi maayan thannadi potru maayaigal vilagi vidum - ini) Praise the Mannadi Maayan to get rid of illusions - Henceforth உன்னடி போற்றி மாலைகள் சூட்ட ஊரே திரண்டு வரும் (unnadi potri maalaigal sootta oore thirandu varum) Whole world comes with garlands to praise you. மாயைகள் விலகி விடும் - தொழ ஊரே திரண்டு வரும் (maayaigal vilagi vidum - thozha oore thirandu varum) Illusions eradicate when world comes together to pray Summary-11 Praise the Mannadi Maayan to get rid of illusions and the whole world comes with garland to praise you. Illusions will eradicate and world comes together to pray. சக்தி குமாரன் தேவன் பாடல் சத்திய கீதமடி - அவன் (shakthi kumaaran dhevan paadal saththiya geethamadi - avan) Devi's son's songs are truthful songs சங்கர தேசிகன் பற்றிச் சொன்னவை நித்திய வேதமடி (Shankara dhesigan patri sonnavai niththiya vedhamadi) The writings on Siva Shankara Desigan is eternal vedhas சத்திய கீதமடி - அது நித்திய வேதமடி (saththiya geethamadi - adhu niththiya vedhamadi) Truthful songs -Eternal vedhas Summary-12 Devi's son's songs are truthful songs and writings on Siva Shankara Desigan is eternal vedhas. Truthful songs and eternal vedhas.

 
 
 

Recent Posts

See All
Brammam Poorana Brammam

Audio: https://drive.google.com/file/d/1U79puiaWbsKUd7TPwRGSyyeCDWJhpIFw/view?usp=sharing Brammam poorana brammam - Narayana poorana...

 
 
 
Baba's National Anthem

Audio: https://drive.google.com/file/d/10SFYC_ZJf_VFeH_thSQJ5SW-4RheuKRg/view?usp=sharing Arumarai naayagan thiru urai maarban...

 
 
 
Babavin Aanmiigam

Babavin aanmeegam pudhidhaanadhu Paarellam oliveesum kadhiraanadhu Edhayum paadhiththu vidaadhadhu Edhanaalum paadhikka padaadhadhu...

 
 
 

Commenti


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page