Azhudhaal unnai
- SamratchanaLyrics
- Feb 15, 2019
- 1 min read
Azhudhaal unnai peralaame
amala nin anbil magizhvome
kazhuvaay thedum en maname - ivan
kaalgal namadhu adaikkalame
vazhuvaa neriyil vaazhvome
vaiyam uyarndhida ninaippome
pazhudhe vaaraa oru paadhai
bakthiyudan pin thodarvome
nilaiyaa ulagai marappome
ninaiyaa padhaviyil sirappome
malaiyaay edhir varum idargalellaam
maaykkum padhathil nilaippome
vinai yaavaiyume ozhithiduvaan
vizhippaay irundhu kaathiduvaan
unai yaar enru avan arivaan
unarvaay ivan thaan param porule
inai yaar evarum illaadhaan
iyalbaay pazhagum inimaiyinaan
imaiyaa vizhigal kondavanaam
irai uruvaam Siva Shankarane
arulaal ulagai aalvaane
anbaal vetrigal kolvaane
irulaay niraindha manangalile
oliyaay padarndhu niraivaane
அழுதால் உன்னை பெறலாமே
அமல நின் அன்பில் மகிழ்வோமே
கழுவாய் தேடும் என் மனமே - இவன்
கால்கள் நமது அடைக்கலமே
வழுவா நெறியில் வாழ்வோமே
வையம் உயர்ந்திட நினைப்போமே
பழுதே வாரா ஒரு பாதை
பக்தியுடன் பின் தொடர்வோமே
நிலையா உலகை மறப்போமே
நினையா பதவியில் சிறப்போமே
மலையாய் எதிர் வரும் இடர்களெல்லாம்
மாய்க்கும் பதத்தில் நிலைப்போமே
வினை யாவையுமே ஒழித்திடுவான்
விழிப்பாயிருந்து காத்திடுவான்
உனை யார் என்று அவன் அறிவான்
உணர்வாய் இவன்தான் பரம் பொருளே
இணையார் எவரும் இல்லாதான்
இயல்பாய் பழகும் இனிமையினான்
இமையா விழிகள் கொண்டவனாம்
இறை உருவாம் சிவ சங்கரனே
அருளால் உலகை ஆள்வானே
அன்பால் வெற்றிகள் கொள்வானே
இருளாய் நிறைந்த மனங்களிலே
ஒளியாய் படர்ந்து நிறைவானே
Commentaires