Azhagukku azhagoottum
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Azhagukku azhagoottum animaniyaay naan varuven
amma un sparisaththil agilaththai marandhiruppen
paadhaththil mettigalaay paarvadhiye naan kidandhaal
vedhangal ariyaadha vimmidhame kondiruppen
thandai kolusugalaay thaaye naan vandhirundhal
thaaraniyil un pugazhai thaalamodu paadiduven
iduppilani megalaiyaay ila mayile unai thazhuvi
eeswaari un asaivukku isai kootti magizhndhiruppen
kazhuththinile punaindhirukkum kanaka mani naanaanaal
karpagam un nenjodu kalandhu uraiyaadiduven
kaadhugalil thaadangamaay kanne nee enai anindhaal
kadhaigal pala naan solli kannmoodi uranga vaippen
minnalidum pon kuzhaiyaay mogini naan uruveduththaal
kannaththai thottaadi en kali theera konjiduven
shenbagapoo naasiyile sirikkum ani naanaanaal
Sivashankari un moochai swasiththe uyir vaazhven
vadivazhagi un siraththil vanaindha pon magudamenraal
vaanalaavum un keerththi vannangalaal oli peruven
அழகுக்கு அழகூட்டும் அணி மணியாய் நான் வருவேன்
அம்மா உன் ஸ்பரிசத்தில் அகிலத்தை மறந்திருப்பேன்
பாதத்தில் மெட்டிகளாய் பார்வதியே நான் கிடந்தால்
வேதங்கள் அறியாத விம்மிதமே கொண்டிருப்பேன்
தண்டை கொலுசுகளாய்த் தாயே நான் வந்திருந்தால்
தாரணியில் உன் புகழை தாளமொடு பாடிடுவேன்
இடுப்பிலணி மேகலையாய் இள மயிலே உனைத்தழுவி
ஈஸ்வரி உன் அசைவுக்கு இசை கூட்டி மகிழ்ந்திருப்பேன்
கழுத்தினிலே புனைந்திருக்கும் கனக மணி நானானால்
கற்பகம் உன் நெஞ்சோடு கலந்து உரையாடிடுவேன்
காதுகளில் தாடங்கமாய் கண்ணே நீ எனை அணிந்தால்
கதைகள் பல நான் சொல்லி கண்மூடி உறங்க வைப்பேன்
மின்னலிடும் பொன் குழையாய் மோகினி நான் உருவெடுத்தால்
கன்னத்தைத் தொட்டாடி என் கலி தீரக் கொஞ்சிடுவேன்
செண்பகப்பூ நாசியிலே சிரிக்கும் அணி நானானால்
சிவசங்கரி உன் மூச்சைச் சுவசித்தே உயிர் வாழ்வேன்
வடிவழகி உன் சிரத்தில் வனைந்த பொன் மகுடமென்றால்
வானளாவும் உன் கீர்த்தி வண்ணங்களால் ஒளி பெறுவேன்
Comments