top of page

Azhagu konjum

  • SamratchanaLyrics
  • Feb 19, 2019
  • 1 min read

Azhagu konjum mazhalai murugan - than

kazhalil panindhorkku kaniyum maal marugan

pazhagum thamizh valarththa thalaivan - vazhangum

arulukku eedu illaadha iniyan


yeragaththon swami naadhan - manath

theragaththe pranava porul sonna dheedhan

maaragathon sevvaayk kadhiban - thanai

paarmugam ellaam parikkum gunaalan


pazhani padhi vaazh kumaaran - than

mazhalai kural pesi mayakkum singaaran

paalaabishegam kollum baalan

kaalanum anjum oli siru thandai kaalan


parangkunril uraiginra dhevan

varam thandhu vaazhvikkum valli manaalan

karam patri kurai kettu kann thudaikkum seyan

param thandhu piravi azhikkum magarasan


sendhoor uraiginra selvan - varam

thandhaala manamirangi vandha dhayaalan

kandhaa kumaraa enru azhaiththaal - than

senthaal sivandhida siriththodi varuvaan


thiruththani urandhidum dhivyan - namai

varuththum bavamaayi agatridum bavyan

siruththa idai dheva senai valli - avar

karuththil urandhidum kalyaana kolan


aavinan kudi vaazhum punyan - en

aaviyil kudi pugundhadhaal yaane dhanyan

paavi enai kann paarththa kanyan

saavilum en thunai sri subramanyan


அழகு கொஞ்சும் மழலை முருகன் - தன்

கழலில் பணிந்தோர்க்கு கனியும் மால் மருகன்

பழகும் தமிழ் வளர்த்த தலைவன் - வழங்கும்

அருளுக்கு ஈடு இல்லாத இனியன்


ஏரகத்தோன் ஸ்வாமி நாதன் - மனத்

தேரகத்தே ப்ரணவப் பொருள் சொன்ன தீதன்

மாரகதோன் செவ்வாய்க் கதிபன் - தனைப்

பார்முகம் எல்லாம் பறிக்கும் குணாளன்


பழநிப்பதி வாழ் குமாரன் - தன்

மழலைக்குரல் பேசி மயக்கும் சிங்காரன்

பாலாபிஷேகம் கொள்ளும் பாலன்

காலனும் அஞ்சும் ஒலி சிறு தண்டைக் காலன்


பரங்குன்றில் உறைகின்ற தேவன்

வரம் தந்து வாழ்விக்கும் வள்ளி மணாளன்

கரம் பற்றிக் குறை கேட்டு கண் துடைக்கும் சேயன்

பரம் தந்து பிறவி அழிக்கும் மகராசன்


செந்தூர் உறைகின்ற செல்வன் - வரம்

தந்தாள மனமிரங்கி வந்த தயாளன்

கந்தா குமரா என்று அழைத்தால் - தன்

செந்தாள் சிவந்திட சிரித்தோடி வருவான்


திருத்தணி உறைந்திடும் திவ்யன் - நமை

வருத்தும் பவமாயை அகற்றிடும் பவ்யன்

சிறுத்த இடை தேவ சேனை வள்ளி - அவர்

கருத்தில் உறைந்திடும் கல்யாணக் கோலன்


ஆவினன் குடி வாழும் புண்யன் - என்

ஆவியில் குடி புகுந்ததால் யானே தன்யன்

பாவியெனைக் கண் பார்த்த கண்யன்

சாவிலும் என் துணை ஸ்ரீ சுப்ரமன்யன்


 
 
 

Recent Posts

See All
Aadhi shankara guru

Audio: https://drive.google.com/file/d/1oi_Zv04wB8zg57Xj_29e7XyRl8jNr0Fp/view?usp=sharing Aadhi shankara guru avadharan – ivan Aadhi...

 
 
 
Aadi varugudhu

Audio: https://drive.google.com/file/d/1Pn4dYrOBnV_FL0GG114gQRfGW-Aedo2G/view?usp=sharing Aadi varugudhu thangaratham oadi vandhu...

 
 
 
Aadi varum pallaakkile

Audio: https://drive.google.com/file/d/1naP5LwL6zbV9C2QlLmYxkP71rFrF0n6r/view?usp=sharing Aadi varum pallaakkile asaindhu varum...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page