Azhage uruvaana
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Azhage uruvaana Shankarane
arul mazhai thengiya porkulame
karunai pozhivadhil virpanane
kaappadhil kannanaay nirpavane
mazhai veyil kadum puyal kaalaththile
makkalin kudaiyaay malarbavane
yechchaiyum pechchaiyum yendhi kolvaay
yesuvaay siluvaigal thaangi kolvaay
ponmazhai meniyil pozhigaiyilum
ramanaay punnagai purindhiduvaay
abayakaram neettum hayagreevaa
pizhai seydha mazhalaikkum maar tharavaa
kazhugukkum kadan seidha ramapiraan
theevinai theerththarul Sivashankaraa
yaaththirai thuvakkam mannadiyil
yaagangal neelaankarai arugil
motchangal raama raajjiyaththil
puriyaa naaththigam poojjiyaththil
potralum thootralum un leelai
puriyaa maanudam perum kozhai
naan seidha punniyam un jananam
raagavaa Shankara naan charanam
அழகே உருவான சங்கரனே
அருள் மழை தேங்கிய பொற்குளமே
கருணை பொழிவதில் விற்பனனே
காப்பதில் கண்ணனாய் நிற்பவனே
மழை வெயில் கடும் புயல் காலத்திலே
மக்களின் குடையாய் மலர்பவனே
ஏச்சையும் பேச்சையும் ஏந்திக் கொள்வாய்
ஏசுவாய் சிலுவைகள் தாங்கி கொள்வாய்
பொன்மழை மேனியில் பொழிகையிலும்
ராமனாய் புன்னகை புரிந்திடுவாய்
அபயகரம் நீட்டும் ஹயக்ரீவா
பிழை செய்த மழலைக்கும் மார் தரவா
கழுகுக்கும் கடன் செய்த ராமபிரான்
தீவினை தீர்த்தருள் சிவசங்கரா
யாத்திரை துவக்கம் மண்ணடியில்
யாகங்கள் நீலாங்கரை அருகில்
மோட்சங்கள் ராம ராஜ்ஜியத்தில்
புரியா நாத்திகம் பூஜ்ஜியத்தில்
போற்றலும் தூற்றலும் உன் லீலை
புரியா மானுடம் பெரும் கோழை
நான் செய்த புண்ணியம் உன் ஜனன்ம்
ராகவா சங்கரா நான் சரணம்
Comments