Azhage Azhage
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
அழகே அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்
அன்பே அமுதே என்று அழைத்து மகிழ்கிறேன்
கழலை நினைந்தாலே உன் கருணை காண்கிறேன்
பழகும் எளிமை கண்டு பெருமிதமே அடைகிறேன்
உதிக்கும் கதிருள்ளே உன் ஒளிமுகம் காண்கிறேன்
உறங்கும் என் விழியுள் உன் நடனம் பார்க்கிறேன்
செய்யும் தொழில்களெல்லாம் உன் சேவை என்கிறேன்
செதுக்கும் உந்தன் கையுள் சிறையாக விழைகிறேன்
தொட்டதைப் பொன்னாக்கும் தெய்வீகம் உணர்கிறேன் - கால்
பட்ட இடம் எல்லாம் புண்ய தலமாய் பணிகிறேன்
விட்டகுறை தொட்டதனால் நீ உறவு என்கிறேன்
வெற்றி தரும் கரம் கண்டு சிவசங்கரம் என்கிறேன்
பற்றி உன் பதம் விழுந்து ஸ்வாமி சரணம் என்கிறேன் - உனை
சுற்றி சுற்றி வந்து ஒரு சுகமே காண்கிறேன்
வற்றி விட்ட பலர் வாழ்வில் புது வசந்தம் காண்கிறேன் - உன்
நெற்றியின் நீலச் சுடரை கண்டு நெகிழ்ந்து கரைகிறேன்
コメント