top of page

Azhagaar arive

  • SamratchanaLyrics
  • Feb 19, 2019
  • 1 min read

Azhagaar arive arivaar azhage

alayaar kadalil thuyilum porule

ilagaa manamum ilagum thavame

enaiyaal guruve Sivashankarame


pularum pularum irul poy agalum

pudhu naal malarum kali poy agalum

ulagam pudhidhaay malarum enave

udane thiravaay vizhi maadhavane


ulagin oli nee oliyin oli nee

unai yaararivaar Sivashankarane

vizhiyin vizhi nee vazhiyin vazhi nee

viraivaay malarvaay vizhi aadhavane


gadhiyin gadhiye vidhiyin vidhiye

karunai mukile Sivashankarane

kadhirin gadhiye madhiyin madhiye

kanalin kanale oli thandharulvaay


neelaankarai ser nimala vimala

ninaiye charanaagadhiyaay adaindhom

melaam porulaay milirvaanavane

saagaa varame thara vandhiduvaay


thiruvaasagamo thiruvaay mozhiyo

thirunaan maraiyo mozhi vaasagamo

karu vaasanaiye karai vaasagamaam

kavi vaasagam nee urai vaasagame


manidham manidham adhuve punidham

ena oadhidum Shankara dhesigane

ulagam muzhudhum unadhe ninaivaay

unai vaasalil thedudhal kaangilaiyo


udhayam udhaym vadhanam udhayam

udhayam vadhanam enum velaiyile

idhayam muzhudhum amudham amudham

ena aagiradhe Sivashankarane


azhuvaar thozhuvaar ezhuvaar vizhuvaar

arulaar mugame edhir paarthiduvaar

adiyaar palarum udan vandhanaraal

vizhi nee thiravaay Sivashankarane


urugum adiyaar ulam aalayamaay

udane varuvaay varuvaay arulvaay

parugum vizhiyaar puriyum thavame

parame parame Sivashankarame



அழகார் அறிவே அறிவார் அழகே

அலையார் கடலில் துயிலும் பொருளே

இளகா மனமும் இளகும் தவமே

எனையாள் குருவே சிவசங்கரமே


புலரும் புலரும் இருள் போய் அகலும்

புது நாள் மலரும் கலி போய் அகலும்

உலகம் புதிதாய் மலரும், எனவே

உடனே திறவாய் விழி மாதவனே


உலகின் ஒளி நீ ஒளியின் ஒளி நீ

உனை யாரறிவார் சிவசங்கரனே

விழியின் விழி நீ வழியின் வழி நீ

விரைவாய் மலர்வாய் விழி ஆதவனே


கதியின் கதியே விதியின் விதியே

கருணை முகிலே சிவசங்கரனே

கதிரின் கதியே மதியின் மதியே

கனலின் கனலே ஒளி தந்தருள்வாய்


நீலாங்கரை சேர் நிமலா விமலா

நினையே சரணாகதியாய் அடைந்தோம்

மேலாம் பொருளாய் மிளிர்வானவனே

சாகாவரமே தர வந்திடுவாய்


திருவாசகமோ திருவாய் மொழியோ

திருநான்மறையோ மொழி வாசகமோ

கருவாசனையே கரை வாசகமாம்

கவி வாசகம் நீ உரை வாசகமே


மனிதம் மனிதம் அதுவே புனிதம்

என ஓதிடும் சச்ங்கர தேசிகனே

உலகம் முழுதும் உனதே நினைவாய்

உனை வாசலில் தேடுதல் காண்கிலையோ


உதயம் உதயம் வதனம் உதயம்

உதயம் வதனம் எனும் வேளையிலே

இதயம் முழுதும் அமுதம் அமுதம்

என ஆகிறதே சிவசங்கரனே


அழுவார் தொழுவார் எழுவார் விழுவார்

அருளார் முகமே எதிர் பார்த்திடுவார்

அடியார் பலரும் உடன் வந்தனரால்

விழி நீ திறவாய் சிவ சங்கரனே


உருகும் அடியார் உளம் ஆலயமாய்

உடனே வருவாய் வருவாய் அருள்வாய்

பருகும் விழியார் புரியும் தவமே

பரமே பரமே சிவசங்கரமே





 
 
 

Recent Posts

See All
Aadhi shankara guru

Audio: https://drive.google.com/file/d/1oi_Zv04wB8zg57Xj_29e7XyRl8jNr0Fp/view?usp=sharing Aadhi shankara guru avadharan – ivan Aadhi...

 
 
 
Aadi varugudhu

Audio: https://drive.google.com/file/d/1Pn4dYrOBnV_FL0GG114gQRfGW-Aedo2G/view?usp=sharing Aadi varugudhu thangaratham oadi vandhu...

 
 
 
Aadi varum pallaakkile

Audio: https://drive.google.com/file/d/1naP5LwL6zbV9C2QlLmYxkP71rFrF0n6r/view?usp=sharing Aadi varum pallaakkile asaindhu varum...

 
 
 

Comentarios


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page