Azhagaana kann
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Azhagaana kann imaiththu arugaaga enai azhaiththu
nilaiyaana perinbam thandhavale - unai
ninaiyaadha neramundo ennavale
palakaalum unai bajiththu paadhaambuyam thudhiththu
nalam yaavum pera vaiththaay ennavale
gnaaname vadivaana pennavale
dhisai engum un naamam isaiyagave olikka
asaiginra kolgalellaam annai unai thudhikka
pisaiginra vidhi thanile pizharaamal kaaththavale
visai undhum perarule en vizhi oliye Shankariye
nadamaadi en ullam thanai aada vaippavale
dhidamaaga nambi vandhen thiruvarul purivaaye
padamaadum paambanindha parameswaran thunaiye
padham naadi vandha ennai parivaaga anaippaaye
அழகான கண் இமைத்து அருகாக எனை அழைத்து
நிலையான பேரின்பம் தந்தவளே - உனை
நினையாத நேரமுண்டோ என்னவளே
பலகாலும் உனை பஜித்து பாதாம்புயம் துதித்து
நலம் யாவும் பெற வைத்தாய் என்னவளே
ஞானமே வடிவான பெண்ணவளே
திசையெங்கும் உன் நாமம் இசையாகவே ஒலிக்க
அசைகின்ற கோள்களெல்லாம் அன்னை உனை துதிக்க
பிசைகின்ற விதிதனிலே பிழறாமல் காத்தவளே
விசை உந்தும் பேரருளே என் விழி ஒளியே சங்கரியே
நடமாடி என் உள்ளம் தனையாட வைப்பவளே
திடமாக நம்பி வந்தேன் திருவருள் புரிவாயே
படமாடும் பாம்பணிந்த பரமேஸ்வரன் துணையே
பதம் நாடி வந்த என்னை பரிவாக அணைப்பாயே
Comments