Avaniyellaam Nalam Perave
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
அவனியெலாம் நலம் பெறவே அவதரித்த தெய்வம்
ஆனந்தம் தந்து நமை அரவணைக்கும் தெய்வம்
இரக்கம் ஒரு வடிவெடுத்து வந்த பெருந்தெய்வம்
ஈடில்லாப் புகழ் படைத்த எங்கள் குலதெய்வம்
உறுதுணையாய் நின்று மனம் உருக வைக்கும் தெய்வம்
ஊழ்வினைகள் போக்கிடவே வந்த மகா தெய்வம்
எங்கும் ப்ரகாசமொடு இலங்குகின்ற தெய்வம்
ஏகாந்த வாசமதை விரும்புகின்ற தெய்வம்
ஐந்தெழுத்து மந்திரத்தை அருளியதித் தெய்வம்
ஐங்கரனும் அறுமுகனும் அடிபணியும் தெய்வம்
ஒப்பிலாத ஞான ஒளி வீசுகின்ற தெய்வம்
ஓடி வந்தணைத்து நம்முள் ஒன்றிவிடும் தெய்வம்
ஔடதமாய் வேதனைகள் ஆற்றிவிடும் தெய்வம்
அ.:.தே நமை ஆட்கொண்ட சிவசங்கர தெய்வம்
கண் படைத்த பயனாய்த் தனைக் காணத் தந்த தெய்வம்
காலமெலாம் தன் நாமம் சொல்ல வைத்த தெய்வம்

Comments