Avan ivan ennum
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Avan ivan ennum vaarththaigalaal
oar archanai nadakkiradhu - idhan
arththam aazham purindhavar manadhil
aanandham nilaikkiradhu
sivan ivan enru sindhikkum nenjil
thelivu pirakkiradhu - andha
thirumaal dharisanam ivanidaththile
dhinamum kidaikkiradhu
samratchana enum karpaga solaiyai
thalaiyil thaangugiraan - than
thalaiyil thaangi thannidam varuvor
nilaiyai uyarthugiraan
charanam adaindhaal abayam koduththe
than vayamaakkugiraan
abayam koduththe aishwaryamennum
amudham oottugiraan
kadvul naanena nimirndhu ninre
maarbinai thattugiraan - nee
kaana virumbum kadavulin vadivam
ivane kaattugiraan
adadaa paar paar arasanai pol ivan
aadaigal poonugiraan
aanaalum ivan aandi kolaththil
agaththul vaazhugiraan
manidhan oruvan punidhan aagiya
vaazhviyal ivan saridham - indha
maadhavan pugazhai oadhi unarndhaal
theerndhidum nam thuyaram
anaivarin meedhum karunaiyai pozhiyum
arulaalan idhayam - indha
arutperunjothiyai nerunguvadhillai
aayulenum kanidham
jeevaathmaavum paramaathmaavum
onraay aana nilai - indha
dhegaththukkul yaagam valarththe
sidhdhigal petra nilai
kovilai vidavum arul mazhai pozhiyum
kundali shakthi nilai - indha
kulayam muzhudhum thava nilai ezhudhum
aanmeega gnaana malai [Baba]
அவன் இவன் என்னும் வார்த்தைகளால் ஓர் அர்ச்சனை நடக்கிறது - இதன்
அர்த்தம் ஆழம் புரிந்தவர் மனதில் ஆனந்தம் நிலைக்கிறது
சிவன் இவன் என்று சிந்திக்கும் நெஞ்சில் தெளிவு பிறக்கிறது - அந்த
திருமால் தரிசனம் இவனிடத்திலே தினமும் கிடைக்கிறது
சம்ரட்சணா எனும் கற்பக சோலையை தலையில் தாங்குகிறான் - தன்
தலையில் தாங்கி தன்னிடம் வருவோர் நிலையை உயர்த்துகிறான்
சரணம் அடைந்தால் அபயம் கொடுத்தே தன் வயமாக்குகிறான்
அபயம் கொடுத்தே ஐஸ்வர்யமென்னும் அமுதம் ஊட்டுகிறான்
கடவுள் நானென நிமிர்ந்து நின்றே மார்பினைத் தட்டுகிறான் - நீ
காண விரும்பும் கடவுளின் வடிவம் இவனே காட்டுகிறான்
அடடா பார் பார் அரசனைப் போல் இவன் ஆடைகள் பூணுகிறான்
ஆனாலும் இவன் ஆண்டிக் கோலத்தில் அகத்துள் வாழுகிறான்
மனிதன் ஒருவன் புனிதன் ஆகிய வாழ்வியல் இவன் சரிதம் - இந்த
மாதவன் புகழை ஓதி உணர்ந்தால் தீர்ந்திடும் நம் துயரம்
அனைவரின் மீதும் கருணையை பொழியும் அருளாளன் இதயம் - இந்த
அருட்பெருஞ்சோதியை நெருங்குவதில்லை ஆயுளெனும் கணிதம்
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றாய் ஆன நிலை - இந்த
தேகத்துக்குள் யாகம் வளர்த்தே சித்திகள் பெற்ற நிலை
கோவிலை விடவும் அருள்மழை பொழியும் குண்டலி சக்தி நிலை - இந்த
குவலயம் முழுதும் தவநிலை எழுதும் ஆன்மீக ஞான மலை [பாபா]
Comments