top of page

Atchaya paaththiramo

  • SamratchanaLyrics
  • Feb 19, 2019
  • 2 min read

Atchaya paaththiramo - ulaa varum

aanandha keerththanamo

ichchayil uzhalum manidharai meetkum

iyalisai naadagamo


anbenum aalayamo - ivan oru

anubava noolagamo

nanbanai pol vandhu gnaanam nalgum

narayanan ivano - ivan


atchaya paaththiramo - ulaa varum

aanandha keerththanamo

atcharam oadhi atchadhai podum

adhisaya maruththuvano


vaanaiyum mannaiyum alandhavano - thiru

vaasagam thudhikkum eeswarano

thaane thanakkum poraadi vellum

thaaraga mandhiram uraippavano - ivan

atchaya paaththiramo - ula varum

aanandha keerththanamo

inbamum thunbamum sari samam ennum

ilakkiyam padaippavano


aasaiyai ozhiththavano - ulagin

aanmeega kadhiravano

maasugal agatri aasi vazhangum

eesanin sudar mugamo - ivan


atchaya paaththiramo - ulaa varum

aanandha keerththanamo

manpadhai muzhudhum than kadhai ezhudhum

magaththuvam arindhavano


poovinam viyandhida sirippavano - ezhil

punnagai kolam varaibavano

kaaviri gangaiyil neeraadi kondum

kaatrinai pusiththum vaazhbavano - ivan


atchaya paaththiramo - ulaa varum

aanandha keerththanamo

aththanai mozhiyilum atchadhai yerkum

ammai appan ivano


thirukkural therlivuraiyo - murugan

thiruppugazh oli nadaiyo

jeevanai sivanaay maatriye vaazhum

dheivaththin mugavariyo - ivan


atchaya paaththiramo - ulaa varum

aanandha keerththanamo

unakkul unnai uyarththida munaiyum

oankaaram ivano


kambanum virumbum kavi nayamo - ivan

kaaladi manndhaan gurukulamo

samratchana enum thereri vandhu

saadhanai padaikkum maadhavano - ivan


atchaya paaththiramo - ulaa varum

aanandha keerththanamo

uchchiyil vaiththe mechchida thonrum

ulaga mahaa kaviyo


அட்சய பாத்திரமோ - உலாவரும்

ஆனந்த கீர்த்தனமோ

இச்சையில் உழலும் மனிதரை மீட்கும்

இயலிசை நாடகமோ


அன்பெனும் ஆலயமோ - இவன் ஒரு

அனுபவ நூலகமோ

நண்பனைப் போல் வந்து ஞானம் நல்கும்

நாராயணன் இவனோ - இவன்


அட்சய பாத்திரமோ - உலா வரும்

ஆனந்த கீர்த்தனமோ

அட்சரம் ஓதி அட்சதை போடும்

அதிசய மருத்துவனோ


வானையும் மண்ணையும் அளந்தவனோ - திரு

வாசகம் துதிக்கும் ஈஸ்வரனோ

தானே தனக்குள் போராடி வெல்லும்

தாரக மந்திரம் உரைப்பவனோ - இவன்


அட்சய பாத்திரமோ - உலாவரும்

ஆனந்த கீர்த்தனமோ

இன்பமும் துன்பமும் சரி சமம் என்னும்

இலக்கியம் படைப்பவனோ


ஆசையை ஒழித்தவனோ - உலகின்

ஆன்மீக கதிரவனோ

மாசுகள் அகற்றி ஆசி வழங்கும்

ஈசனின் சுடர் முகமோ - இவன்


அட்சய பாத்திரமோ உலாவரும்

ஆனந்த கீர்த்தனமோ

மன்பதை முழுதும் தன் கதை எழுதும்

மகத்துவம் அறிந்தவனோ


பூவினம் வியந்திட சிரிப்பவனோ - எழில்

புன்னகை கோலம் வரைபவனோ

காவிரி கங்கையில் நீராடிக் கொண்டும்

காற்றினை புசித்தும் வாழ்பவனோ - இவன்


அட்சய பாத்திரமோ - உலாவரும்

ஆனந்த கீர்த்தனமோ

அத்தனை மொழியிலும் அர்ச்சனை ஏற்கும்

அம்மையப்பன் இவனோ


திருக்குறள் தெளிவுரையோ - முருகன்

திருப்புகழ் ஒளி நடையோ

ஜீவனை சிவனாய் மாற்றியே வாழும்

தெய்வத்தின் முகவரியோ - இவன்


அட்சய பாத்திரமோ உலாவரும்

ஆனந்த கீர்த்தனமோ

உனக்குள் உன்னை உயர்த்திட முனையும்

ஓங்கரம் இவனோ


கம்பனும் விரும்பும் கவி நயமோ - இவன்

காலடி மண்தான் குருகுலமோ

சம்ரட்சணா எனும் தேரேறி வந்து

சாதனை படைக்கும் மாதவனோ - இவன்


அட்சய பாத்திரமோ உலாவரும்

ஆனந்த கீர்த்தனமோ

உச்சியில் வைத்தே மெச்சிடத் தோன்றும்

உலக மகா கவியோ




 
 
 

Recent Posts

See All
Aadhi shankara guru

Audio: https://drive.google.com/file/d/1oi_Zv04wB8zg57Xj_29e7XyRl8jNr0Fp/view?usp=sharing Aadhi shankara guru avadharan – ivan Aadhi...

 
 
 
Aadi varugudhu

Audio: https://drive.google.com/file/d/1Pn4dYrOBnV_FL0GG114gQRfGW-Aedo2G/view?usp=sharing Aadi varugudhu thangaratham oadi vandhu...

 
 
 
Aadi varum pallaakkile

Audio: https://drive.google.com/file/d/1naP5LwL6zbV9C2QlLmYxkP71rFrF0n6r/view?usp=sharing Aadi varum pallaakkile asaindhu varum...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page