Ashtakara Durgai
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Ashtakara durgai nee ambigaiye
aayi magamaayi Sivashankariye
itta varam thandhiduvaay yendhizhaiye
eesan uyir kaaththa parameswariye
utravalum neeyadiyo umaiyavale - em
oozhvinaigal tholaiththa karumaariyale
engum undhan pugazh isaippom dheviyale
yezhai emakkaadharavaay vandhavale
aingara ganapadhikku annaiyale
aiyappa dhevanukkum thaayavale
otrumaiyai thandhidamma petravale
oankaara reenkaaram seibavalee
gangaiyaval varavetra ponniyale - sri
ranganukku ilaiyadhoru kanniyale
singa vaaganam yerum annaiyale - em
sindhaiyellaam aatkonda nangaiyale
porkaraththaal arpudhangal seibavale
poonkodiye chennai nagar kaaliyale
vatraadha samuththiramaam anbinale
varam thandhu vaazhththuginra panbinale
vyaadhigalai theerkkinra viththagiye - thillai
kyaadhi petra nataraasa narththagiye
pedhai manam pugundhamarndha siththiniye
vedhamellaam potrum siva paththiniye
அஷ்டகர துர்க்கை நீ அம்பிகையே
ஆயி மகமாயி சிவசங்கரியே
இட்ட வரம் தந்திடுவாய் ஏந்திழையே
ஈசன் உயிர் காத்த பரமேஸ்வரியே
உற்றவளும் நீயடியோ உமையவளே - எம்
ஊழ்வினைகள் தொலைத்த கருமாரியளே
எங்கும் உந்தன் புகழ் இசைப்போம் தேவியளே
ஏழை எமக்காதரவாய் வந்தவளே
ஐங்கர கணபதிக்கு அன்னையளே
ஐயப்ப தேவனுக்கும் தாயவளே
ஒற்றுமையைத் தந்திடம்மா பெற்றவளே
ஓங்கார ரீங்காரம் செய்பவளே
கங்கையவள் வரவேற்ற பொன்னியளே - ஸ்ரீ
ரங்கனுக்கு இளையதொரு கன்னியளே
சிங்கவாகனம் ஏறும் அன்னையளே - எம்
சிந்தையெல்லாம் ஆட்கொண்ட நங்கையளே
பொற்கரத்தால் அற்புதங்கள் செய்பவளே
பூங்கொடியே சென்னை நகர் காளியளே
வற்றாத சமுத்திரமாம் அன்பினளே
வரம் தந்து வாழ்த்துகின்ற பண்பினளே
வியாதிகளைத் தீர்க்கின்ற வித்தகியே - தில்லைக்
கியாதி பெற்ற நடராச நர்த்தகியே
பேதை மனம் புகுந்தமர்ந்த சித்தினியே
வேதமெல்லாம் போற்றும் சிவ பத்தினியே
Comments