Asaindhaadum Mayile Nee
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
அசைந்தாடும் மயிலே நீ ஓடோடி வா
அழகான முருகோனை நீ ஏந்தி வா
இசை கூவும் குயிலே நீ பறந்தோடி வா
இன்று ஒரு புது கீதம் நீ பாடி வா
திசையெல்லாம் இருள் போக்க நீ ஓடி வா
திருப்புகழில் விருப்புடைய தேவா நீ வா
பிசைகின்ற விதி தன்னில் எமை மீட்க வா
பேரின்பம் தரும் எங்கள் பெருமானே வா
உலகெல்லாம் ஒரு சேர உனில் கூடட்டும் - நீ
தருகின்ற அருள் வெள்ளந்தனில் நீந்தட்டும்
வருகின்ற காலங்கள் பொன்னாகட்டும் - நான்
வரைகின்ற உருவெல்லாம் நீயாகட்டும்
போர்க்கால மேகங்கள் கலைந்தோடட்டும்
மார்க்கங்கள் ஒன்றாகி சமமாகட்டும்
கோர்க்கின்ற கவிமாலை உனை சேரட்டும்
என் குருநாதன் சங்கரனின் அருள் கூடட்டும்
Komentāri