Arutkadalin aazhaththai
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Arutkadalin aazhaththai alakka oru karuvi undo - adhan
aanandha alai parappum aarpudhaththir keedundo
thedi vandhu ulagamellaam dharisikkum Shankararaam
dheivaththin kural pozhiyum then mazhaiyil nanaindhadhundo
idi puyal mazhai varugai kanakkeduththaan oru gnaani
ezhil nilavin tharaiyinile irangi vittaan vignaani
idar neekkum oru marundhu ivan vizhiyil kalandha vidham
yedhu idhu maayam ena uraippaayo iraivaa nee
அருட்கடலின் ஆழத்தை அளக்க ஒரு கருவி உண்டோ - அதன்
ஆனந்த அலை பரப்பும் அற்புதத்திற் கீடுண்டோ
தேடி வந்து உலகமெல்லாம் தரிசிக்கும் சங்கரராம்
தெய்வத்தின் குரல் பொழியும் தேன் மழையில் நனைந்ததுண்டோ
இடி புயல் மழை வருகை கணக்கெடுத்தான் ஒரு ஞானி
எழில் நிலவின் தரையினிலே இறங்கி விட்டான் விஞ்ஞானி
இடர் நீக்கும் ஒரு மருந்து இவன் விழியில் கலந்த விதம்
ஏது இது மாயம் என உரைப்பாயோ இறைவா நீ
Comments