Arunanulle Thigazh
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
அருணனுள்ளே திகழ் முகம்
அங்கம் தங்கமாம் முகம்
கருணை கசியும் மலர் முகம்
கனவில் நிதமும் வரு முகம்
அன்பை அள்ளித் தரும் முகம்
ஆசி கூறும் திருமுகம்
இதுதான் அந்த அறுமுகம் - என்
இதயக் குகையில் அமர் முகம்
உலகெலாம் வலம் வரும் முகம்
உள்ளம் கொள்ளை கொள்முகம்
பல கலைகளும் வளர் முகம் - எனை
பல பிறவியாய் தொடர் முகம்
எதிலும் வெற்றி கொள் முகம்
எங்கும் அழகாய் காண் முகம்
நதியாய் வழங்கும் அருள் முகம் - பது
நிதி எனக்கிவன் அறிமுகம்
பதத்திலே கதி தரும் முகம்
பரிசாய் கிடைத்த குரு முகம்
இதத்தை தந்திடும் எழில் முகம்
ஏக்கம் தவிர்க்கும் நகை முகம்
கேளை நகரின் நல முகம்
கேட்பார்க்கருளும் வர முகம்
ஏழை எங்கள் நிழல் முகம்
இறைவன் சிவசங்கரன் முகம்
Comments