Arulennum porul kondu
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Arulennum porul kondu vandhaan - nam
anbinai vilai kondu avanikku thandhaan
irulena porthadhaam maayai - adhai
illaadhu seidhu peroliyaaga ninraan
kailai malai meedhu yeri andha
gangaiyani sadaiyanai kaanave senraan
mayilaiyil vaazhginra sivano - ivan
manamennum koyilai manjamaay kondaan
mahendra giri meedhamarndhu
maathavathil kangal moodiye ninraan
malai polum sithigal petra - oar
maamuni Shankaranai mahaan aakki vittaan
avathoodhar Ragavendhiraraal -oar
anniyan pol thanadhu maranathai kandaan
sivamaagi vitta Siva Shankar - than
sindhaiyil ulaga nalan onraiye kondaan
mannadiyil thavachaalai niruvi
maandharukkaaga than pozhudhazhikkinraan
thannadiyil charanadaindhaarkku - than
thava balathaal vendum varam tharuginraan
அருளென்னும் பொருள் கொண்டு வந்தான் - நம்
அன்பினை விலை கொண்டு அவனிக்கு தந்தான்
இருளென போர்த்ததாம் மாயை - அதை
இல்லாது செய்து பேரொளியாக நின்றான்
கைலை மலை மீது ஏறி - அந்த
கங்கையணி சடையனை காணவே சென்றான்
மயிலையில் வாழ்கின்ற சிவனோ - இவன்
மனமென்னும் கோயிலை மஞ்சமாய்க் கொண்டான்
மகேந்திர கிரி மீதமர்ந்து
மாதவத்தில் கண்கள் மூடியே நின்றான்
மலை போலும் சித்திகள் பெற்ற - ஓர்
மாமுனி சங்கரனை மகானாக்கி விட்டான்
அவதூதர் ராகவேந்திரரால் - ஓர்
அந்நியன் போல் தனது மரணத்தைக் கண்டான்
சிவமாகி விட்ட சிவசங்கர் - தன்
சிந்தையில் உலக நலன் ஒன்றையே கொண்டான்
மண்ணடியில் தவச்சாலை நிறுவி
மாந்தருக்காக தன் பொழுதழிக்கின்றான்
தன்னடியில் சரணடைந்தார்க்கு - தன்
தவபலத்தால் வேண்டும் வரம் தருகின்றான்
Comments