top of page

Arindha pinne

  • SamratchanaLyrics
  • Feb 19, 2019
  • 2 min read

Arindha pinne ariya yedhum aanandham engumillai

adaindha pinne adaiya oru dheivam yezhu ulagilillai

therindha pinne veru jothi thedum yaarkkum kidaikkavillai

purindha pinne pugundhu sella veru maarkkam thevaiyilai


kanda pinne veru kaatchi kangalukkul padhiyavillai

karaindha pinne naan enadhu enru manam sollavillai

vinda uraiyil adhisayiththu thirandha vaaygal moodavillai

viraiyum enadhu kaalgatku nee uraiyum koyil onre ellai


nanaindha kangal kaaya vaikka naattil veru marundhu illai

nagarndhu sellum kolin thisai nambi unnaal maaravillai

anindha undhan udai pol endha avadhaaramum poonavillai

aganra unadhu karunaikku anaithulagum eedu illai


annai kooda unnai pola anbai enakku tharave illai

athatti emmai thiruththa um pol guru evarum kidaiththadhillai

vinnai muttum un uruvam kannai vittu maraiyavillai

veedhiyelaam un pechche veru edhuvum seidhiyillai


thondu seyyum unnai pola kandadhillai kettadhillai

thozhanaaga pazhagi yaarum thol mel kai pottadhillai

pandu vandha krishnan sonna paadhaiyil yaam ponadhillai

bajiththa pinbu veru mandhiram idhayaththile padhiyavillai


anru vandha bandham inru anuvalavum maaravillai

aganra undhan anbu kadalil aazhaadha ullamillai

senra thirukkoyilgalil ninra dheivam pesavillai

jegaththinile unakkinaiyaay yaarumillai evarumillai


Shankarame un pol mana shanthi yaarum thandhadhillai

saasvatha nidhiye un saannithyam engum illai

sindhum undham anbil nanaiyum santhosham edhilumillai

Sivashankara nee engu irundhaalum endhan pillai


அறிந்த பின்னே அறிய ஏதும் ஆனந்தம் எங்குமில்லை

அடைந்த பின்னே அடைய ஒரு தெய்வம் ஏழு உலகிலில்லை

தெரிந்த பின்னே வேறு ஜோதி தேடும் யார்க்கும் கிடைக்கவில்லை

புரிந்த பின்னே புகுந்து செல்ல வேறு மார்க்கம் தேவையில்லை


கண்ட பின்னே வேறு காட்சி கண்களுக்குள் பதியவில்லை

கரைந்த பின்னே நான் எனது என்று மனம் சொல்லவில்லை

விண்ட உரையில் அதிசயித்து திறந்த வாய்கள் மூடவில்லை

விரையும் எனது கால்கட்கு நீ உறையும் கோயில் ஒன்றே எல்லை


நனைந்த கண்கள் காய வைக்க நாட்டில் வேறு மருந்து இல்லை

நகர்ந்து செல்லும் கோளின் திசை நம்பி உன்னால் மாறவில்லை

அணிந்த உந்தன் உடை போல் எந்த அவதாரமும் பூணவில்லை

அகன்ற உனது கருணைக்கு அனைத்துலகும் ஈடு இல்லை


அன்னை கூட உன்னைப் போல அன்பை எனக்கு தரவே இல்லை

அதட்டி எம்மைத் திருத்த உம்போல் குரு எவரும் கிடைத்ததில்லை

விண்ணைமுட்டும் உன் உருவம் கண்ணைவிட்டு மறையவில்லை

வீதியெல்லாம் உன் பேச்சே வேறு எதுவும் செய்தியில்லை


தொண்டு செய்யும் உன்னை போல கண்டதில்லை கேட்டதில்லை

தோழனாக பழகி யாரும் தோள் மேல் கை போட்டதில்லை

பண்டு வந்த க்ருஷ்ணன் சொன்ன பாதையில் யாம் போனதில்லை

பஜித்த பின்பு வேறு மந்திரம் இதயத்திலே பதியவில்லை


அன்று வந்த பந்தம் இன்று அணுவளவும் மாறவில்லை

அகன்ற உந்தன் அன்புக் கடலில் ஆழாத உள்ளமில்லை

சென்ற திருக் கோயில்களில் நின்ற தெய்வம் பேசவில்லை

செகத்தினிலே உனக்கிணையாய் யாருமில்லை எவருமில்லை


சங்கரமே உன் போல் மன சாந்தி யாரும் தந்ததில்லை

சாஸ்வத நிதியே உன் சாந்நித்யம் எங்கும் இல்லை

சிந்தும் உந்தன் அன்பில் நனையும் சந்தோஷம் எதிலுமில்லை

சிவசங்கரா நீ எங்கு இருந்தாலும் எந்தன் பிள்ளை


 
 
 

Recent Posts

See All
Aadhi shankara guru

Audio: https://drive.google.com/file/d/1oi_Zv04wB8zg57Xj_29e7XyRl8jNr0Fp/view?usp=sharing Aadhi shankara guru avadharan – ivan Aadhi...

 
 
 
Aadi varugudhu

Audio: https://drive.google.com/file/d/1Pn4dYrOBnV_FL0GG114gQRfGW-Aedo2G/view?usp=sharing Aadi varugudhu thangaratham oadi vandhu...

 
 
 
Aadi varum pallaakkile

Audio: https://drive.google.com/file/d/1naP5LwL6zbV9C2QlLmYxkP71rFrF0n6r/view?usp=sharing Aadi varum pallaakkile asaindhu varum...

 
 
 

Comentários


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page