Appa Muruga Vaa
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
அப்பா முருகா வா - என்
அமுதத் தமிழே வா
ஓ சுப்பா அருகே வா - மணி
சிணுங்கும் ரதமே வா வா வா
பழனி மலையமர்ந்த - இளம்
பாலகா விரைந்தே வா
கழனியூரின் கந்தா
கதிர்வேலா வா வா வா
செந்தூர்க் கடலலைகள்
சிந்து பாடும் முருகா வா
சேனபதி முருகா - செல்வ
முத்துக் குமரா வா
ஆவினன்குடி வாழும்
அன்புப் பெட்டகமே நீ வா
அருள் பழமுதிர்ச்சோலை
ஆளும் அரசனே வா வா வா
திருப்பரங்கிரி தேவா ஓ
திருமகள் மருகா வா
திருத்தணி திருப்புகழே
தேன் சுவையே வா வா வா
சுந்தர முருகா வா
ஸ்வாமிநாதா வா வா வா
மந்திரப் பொருளுரைத்த
தெய்வ மதலையே வா வா வா
தப்பாதுனைத் தொழுதேன்
ஏழைத் தாயின் அருகே வா
தயக்கம் ஏனையா - அன்பைத்
தரவே வா வா வா

Comments