Annai ival aadi
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Annai ival aadi varum azhagu maya oonjal
agilamadhu suzhala ival aadugiraal oonjal
aanandha saagarathil aadum indha oonjal
aatralodu anbu thandhu aattuvikkum oonjal
vaanamodu vaiyam varai aaduginra oonjal
vairamani vaithizhaitha vadivazhagi oonjal
gnaaniyarin nenjamadhai thedi varum oonjal
naan muganum hari haranum naadi varum oonjal
naal vedham sangiliyaay poottiya dhivoonjal
nambikkaiye uthiramaay kondadhindha oonjal
nandhavanmaaga manam veesi varum oonjal
naayagiyaal aadi varum nam maname oonjal
அன்னையிவள் ஆடி வரும் அழகுமய ஊஞ்சல்
அகிலமது சுழல இவள் ஆடுகிறாள் ஊஞ்சல்
ஆனந்த சாகரத்தில் ஆடும் இந்த ஊஞ்சல்
ஆற்றலொடு அன்பு தந்து ஆட்டுவிக்கும் ஊஞ்சல்
வானமொடு வையம் வரை ஆடுகின்ற ஊஞ்சல்
வைரமணி வைத்திழைத்த வடிவழகி ஊஞ்சல்
ஞானியரின் நெஞ்சமதைத் தேடி வரும் ஊஞ்சல்
நான் முகனும் ஹரிஹரனும் நாடி வரும் ஊஞ்சல்
நால் வேதம் சங்கிலியாய்ப் பூட்டிய திவ்வூஞ்சல்
நம்பிக்கையே உத்திரமாய்க் கொண்டதிந்த ஊஞ்சல்
நந்தவனமாக மணம் வீசி வரும் ஊஞ்சல்
நாயகியாள் ஆடி வரும் நம் மனமே ஊஞ்சல்
Comments