Anjal Enroru Karam
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
அஞ்சல் என்றொரு கரம் அபயம் அளித்திருக்க
சஞ்சலம் இல்லாதிரு - மனமே
சரணம் சரணம் என்றிரு - அவளே
சரணம் சரணம் என்றிரு
மஞ்சள் முக மங்கலை செங்கமல நாயகி
கஞ்ச மலர்ப் பதங்கள் கருணை நிழலிருக்க
சஞ்சலம் இல்லாதிரு - மனமே
சரணம் சரணம் என்றிரு - அவளே
சரணம் சரணம் என்றிரு
கொஞ்சும் மொழி பேசும்
குளிர் மதியின் முகத்தாள்
பஞ்சினும் மெல்லடியை
பதிந்து உன் நெஞ்சில் வைத்தாள்
தஞ்சம் தர என்றுனை
தடுத்து ஆட்கொண்ட சக்தி
மஞ்சம் உந்தன் மடியாய்
வந்து அமர்ந்திருக்க
சரணம் சரணம் என்றிரு - அவளே
சரணம் சரணம் என்றிரு
コメント